உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

193

ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சி றுமையினையும் எல்லாம் வல்ல ஐயன்றன் அருட்பெரும் பெருமையினையும் மறுதலைப் படுத்துக் காட்டி நமதுள்ளத்தை உருக்கி நம்மை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடா வதொரு நூல் எம்மொழியினுமே இல்லை இதற்கு,

“நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நான்எனது எனும்மாயக்

கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்

பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடிய

அரும்பொருள் அடியேனை

அடித்துஅடித்துஅக் காரம்முன் தீற்றிய

அற்புதம் அறியேனே

و,

என்னும் ஆரமிர்தன்ன பின்னும் ஒரு சான்றாம்.

அடிகளின்

திருப்பாட்டே

மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன் மார் தேவாரத்திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர்

அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கையிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந்துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/226&oldid=1590273" இலிருந்து மீள்விக்கப்பட்டது