உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 26

இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன்

னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங்

கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும். அவனைப் பாடர்க்கையிடத்து வைத்துப் பாடிய ஏனை யாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய் வந்த அவ்வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந்தமர்ந்து தம்மை ஆ கொண்ட குருவடிவினையும் அதன்பிற் அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக்குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ்வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும், அதன்பின் மதுரைப் பிட்டு

வாணிச்சி பொருட்டு மண்சுமக்குங் கொற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினையும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி அவ் வாண்டிவன்பால் வைத்த பேரன் பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் க காணவந்து இறைவன் மாணிக்கவாச கர்க்கு அருள்செய்தவாறு போல் வேறெவர்குஞ் செய் திலன். இஃது அடிகளே,

“கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை

வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங்‘ காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/227&oldid=1590274" இலிருந்து மீள்விக்கப்பட்டது