உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முகவுரைகள்

மறைமலையடிகள்

197

யெல்லாம்

தமக்கும் உண் ான கெழு தகைமைகளை எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ்வுலக மெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென்றழைத்தல் எம்மனோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ?

வ்

வரும்பெருங்

கடமையினை நன்கு நிறை வேற்றுதற் பொருட்டாகவே, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் இப் பெருநூலினை மாணிக்கவாசகப் பெருமான் திருவடித் துணை கொண்டு ஆறு ஆண்டு களாக ஆராய்ந்தெழுதி வெளியிடலானேம். இப் பெரு மான்றன் திருவடித் தூசின் மிகச் சிறு துகள் ஒன்றிற்கும் ஒவ்வாத சிற்றறிவினேமாகிய எம்மையும் இம் முயற்சியிற் புகுத்தி, இதனை நிறைவேற்றி வைத்த சிவபிரான் திருவடிப்போதுகளுக்கே இந்நூலை மாலையாக அணிந்து அவற்றை வழுத்துகின்றோம்.

கூற

இனி, இந் நூல் எழுதுதற்கட் கைக்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப்பற்றிச் சில வேண்டுவது இன்றியமையாததாகின்றது. மாணிக்க வாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும்

ஒரு

நூல்களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப் படவில்லை. ஏனென்றால், அக் குறிப்புகளிற் பல புராணத்திற் காணப்பட்டபடியே, மற்றொரு புராணத் திற் காணப்பட வில்லை; ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படுகின்றன; அம் மாறுபாடுகளும் பிறவும் இந் நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுட் காள்ளற்பாலன இவை, தள்ளற்பாலன இவை யென்பதை நன்கு விளக்கிக்காட்டி யி ருக்கின்றோம். இவ்வாறு காட்டுமிடங்களிலெல்லாந் லல்லாந் திருவாசகச் செந்தமிழ்ப்

பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரைகள், அடிகளின் உண்மைவராற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இறைவனை வழுத்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/230&oldid=1590277" இலிருந்து மீள்விக்கப்பட்டது