உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

199

தம் அடிக்கீழ்ப் படுத்துச்

.

பிடியுண்டு நிற்கும்வரையில் மக்கள் பொய்யான வழிகளில் அலைந்து திரிந்து மீளாத் துன்பத்திற்கு ஆளாகி நிற்பர். ஆனதனாற்றான், உண்மையையுள்ளவாறுணர்ந்து இம் மக்கட்பிறவியை உண்மைநெறியிற் செலுத்தி முன்னேற்று தற்கு, அறிவையும் இன்பத்தையும் நமக்கு வழங்கிய நம்மாசிரியரிருந்த காலங்களையும் அக் காலநிலைகளை யும் உணர்வதில் ஐரோப்பிய அறிஞர்கள் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையவர்களா யிருக்கின்றனர். முற்காலத் திருந்த அறிஞரின் உண்மைநிலைகளை யெல்லாம் உண்மையாக ஆராய்ந்தறிந்து, உண்மையறிவில் தலைசிறந்து வருதலினாற் றான் மேனாட்டு வெண்மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் நாகரிகத்திலும் இன்பவாழ்விலும் நாளுக்குநாள் வளர்பிறை போல் வளர்ந்து, அவ் வுண்மையறிவு வாயாத மற்றை நாட்டவர்களையெல்லாந் செங்கோலோச்சி வருகின்றனர். கால ஆராய்ச்சி செய்து அவ்வக்கால நிலைகளையும் அவ்வக்காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமையினாற்றான், நம்நாட்டவர்கள் பொய்க் கதைகளிலும் பொய்த் தெயவ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர்களாய், அதனாற் றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழி வகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித், தம்முட் பகைமையும் பொறாமையுங் கொண்டு, நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போக்கின்றனர்! எனவே, இம் மக்கட்பிறவியைத் தெய்வப்பிறவி யாக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது, கால ஆராய்ச்சியால் உரங் கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சிமுறை இத் தமிழ்நாட்டகத்திலுள்ள அறிஞரெவ ராலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, நந் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலினும் இது காறும் விரிவாகக் காட்டப்படாமையின், மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்கவாசகர் காலம் எம்ால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/232&oldid=1590279" இலிருந்து மீள்விக்கப்பட்டது