உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 26

புதிது புகுந்து தமிழ்ச்சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களிற் றோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன் நூல்களி லின்றிப் பின் நூல் களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராண கதைகளாலும், முற்பிற் காலங்களிற் பொருள் வேறுபட்ட சொற்களாலுஞ் சமயக் கோட்பாடுகளாலுங், காலங்கடோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற்பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந்நூல்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகை களாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயின வற்றிற் புலனாம். அரசரின் காலக்குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல்நாட்டவர் வரைந்துவைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியரைப் பற்றி நுவலும் பகுதிகளாலும், இன்னோரன்ன பிறவற்றாலுந் தமிழாசிரியர் தமிழ்நூல்களின் காலவரையறைகளும், அவ்வக்கால வியல்புகளும், அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்கின்றுழி,

ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களுஞ் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந் நூலைக் கற்பவர்கள்யாம் செய்துகாட்டும்ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற்கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல்கூடும். பெரும்பாலும் தமிழில் உரை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும எழுதும் அறிஞர்கள் தமது கோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாதுபோவர்; ஏனென்றால், அங்ஙனங் குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும் பேருழைப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/233&oldid=1590280" இலிருந்து மீள்விக்கப்பட்டது