உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

205

பாகத்தை இப்போது வெளியிடலானேம், ஏனைச் சொற்பொழி வுகள் தொகுத்த இரண்டாம்பாகம் னிப் பதிப்பிட்டு வெளியிடப்படும்,

எம்முடைய நூல்களிற் சிறுபான்மையாகக் காணப்படும் வடசொற்களையும் முற்றக்களைந்து, தூய தமிழ்ச் சொற்களையே அவ்வவ்விடங்களில் நிரப்பி இப்போது பதிப்பிட்டு வரும் எமது முறைப்படி, இந்நூலின் முற்பதிப்பில் வெளிவந்த விரிவுரை களிலிருந்த வடசொற்களைக் களைந்து ஆங்காங்குத் தூயதமிழ்ச் சொற்களைப் பெய்தும், இப்போது இதன்கட் புதியவாகச் சேர்க்க எடுத்த விரிவுரைகளைத் தூய தனித்தமிழிலேயே எழுதியும் இந்நூலை இயற்றலானேம்.

ஆனாலும், இத்தமிழ் நாட்டிற் புதியராய்ப் புகுந்த ஆரியர், பௌத்தர், சமணர், மாயாவாத வேதாந்திகள், வைணவர் என்பாரெல்லாந், தமிழ் மக்களை மருட்டுதற் பொருட்டு,அவர் வழங்குந் தமிழ்மொழியிற் றம்முடைய கோட்பாடுகளை வரைந்து வையாமல், அவர் அறியாத வடமொழியில் அவை தம்மை வரைந்து வைத்து,அவைகளைமறைபொருளாகவே பரப்பி வந்தமையால்,அன்னார் செய்த ஏமாற்றத்தினின்றுந் தமிழ் மக்களை விடுவிக்கக் கருதிய பிற்காலத்துத் தமிழ்ப் பெரியார் களும், பண்டைத்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிந்த வுண்மை களுக்குச் ‘சைவ சித்தாந்தம்' என வடமொழியிற் சிறப்புப் பெயர் நிறுவியும், அவ்வுண்மைகளை விளக்குங்காற் பற்பல குறியீடுகளை வடசொற் கொண்டே புதியவாய்ச் சமைத்தும், வடமொழி யிலேயே‘சிவாகமங்கள்’, ‘சிவபுராணங்கள்' இயற்றியுந், தமிழ்ச் சான்றோர் தமது மெய் யறிவாற் றெளிந்த மெய்ப் பொருள்களை இத் தமிழ் நாட்டகத்தே பரவச் செய்யலாயினர். அதனால், த் அங்ஙனஞ் சிறப்புப் பெயர்களாகவுங் குறியீடுகளாகவும் புகுந்து தமிழ் நூல்களில் நிலைபெற்ற வடசொற்கள் சொற்றொடர் களைச் சடுதியில் மாற்றினால் அவற்றிற் பழகினார்க்கு இந்நூற் பொருள் மயக்கத்தைத் தருமெனக் கருதி, அவையிற்றை மட்டும் மாற்றாது ஆங்காங்கு இருக்கவிட்டேம். ஆனாலும், அவை தமக்கு நேரான தனித்தமிழ்ச் சொற்களையும் இந்நூலின் இறுதியிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/238&oldid=1590285" இலிருந்து மீள்விக்கப்பட்டது