உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 26

சைவ சித்தாந்த ஞானபோதம் மூன்றாம் பதிப்பின் முகவுரை

கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே 'சைவ சித்தாந்த ஞானபோத முதற்பாகம் என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன.

ந்

இந்நூலின் முதற்பதிப்பாகக் கருதப்படும் எம்முடைய சொற்பொழிவுகள் சில 1906, 1915ஆம் ஆண்டுகளில் வெளிவந்த எமது ஞானசாகரத்தின் இதழ்களில் வெளிப்போந்தனவாகும், அவை அப்போது முன்பனிக்கால உபந்நியாசங்கள் என்னும் பெயரால் தனிநூலாகவும் வெளிவந்தன. அந்நூலில் அடங்கி யவை ஆறு விரிவான சொற்பொழிவுகளேயாகும்,

அப்பதிப்பின் படிகள் செலவானபின், 1922ஆம் ஆண்டில் பின்னும் பத்துச் சொற்பொழிவுகள் சேர்க்கப்பெற்று, ஆக மொத்தம் பதினாறு சொற்பொழிவுகள் அடங்கிய இதன் இரண்டாம் பதிப்பு வெளி வரலாயிற்று,

அவ்விரண்டாம் பதிப்புப் படிகள் செலவழிந்தபின், இதன் மூன்றாம் பதிப்பை அச்சிடத் துவங்கிப் பல ஆண்டுகள் கழிந் தமையானும், இவற்றிடையே இன்னும் பல சொற்பொழிவு களைச் சேர்க்க வேண்டுவது இன்றியமையாததாய் நேர்ந்தமை யானும், இச் சொற்பொழிவுகளை யெல்லாம்ஒருங்கே சேர்ப்பின் இந்நூல் அறுநூறு பக்கங்களுக்கு மேற் பெருகுமெனக் கண்டமை யானும் ஒன்பது சொற்பொழிவுகள் தொகுத்த இந்நூலின் முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/237&oldid=1590284" இலிருந்து மீள்விக்கப்பட்டது