உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமெனும் அருவி தந்தான்;

அன்பெனுஞ் சுனையே தந்தான்;

புறமெலாம் பசுமைப் பண்பே

பொலிந்திடப் பரிந்து தந்தான்; நறவதும், மணியும், பொன்னும் நலம்பெற நயந்து தந்தான்;

துறவினில் மலையாய் நின்றான் தூய்மறை மலையாய் நின்றான்.

- சுத்தானந்த பாரதியார்

நம்மொழிப் புலமை யெல்லாம் நடுத்தெருப் புலமை யாகும்

செம்மொழி பேசி வந்த

திருமறை மலையார் பெற்ற

மும்மொழிப் புலமை யன்றோ

முற்றிய புலமை அன்னார்

தும்மலும் கல்வித் தும்மல்

தூக்கமும் கல்வித் தூக்கம்

- பாவலர். சுரதா

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/258&oldid=1590305" இலிருந்து மீள்விக்கப்பட்டது