உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வேதாந்தமதவிசாரம்

சித்தாந்தஞானபோதம்

காப்பு

66

“தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூஉங்

களிறு வளர் பெருங் காடாயினு

மொளி பெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே.”

நூல்

"வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு என்று பொருள் படும். இவ்வேத முடிவு உபநிடதங்களாம். இவை ஈசாவாஸ்ய முதல் முக்திகோபநிடத மீறாக நூற்றெட்டாம். வேத வேதாந் தங்களைப் பிரமாணமாகத் தழுவிய சமயிகளொவ்வொருவரும் இந் நூற்றெட்டுபநிடதங்களுந் தஞ்சமயத்தையே பிரதிபாதிப்ப னவாகப் புகலா நிற்பர். இவ்வெல்லாருடைய கருத்துகளும் அவற்றினது ஹ்ருதயமாகா. இவற்றுளொன்றே அவற்றின் ஹ்ருதயமாம். அதுவே மூலத்தோடொத்த வேதாந்தமாம். மூலமும் வேதாந்தம் அதன் பொருளும் வேதாந்தம் என்று நிராடங்கமாய்ப் புகழத்தக்க வாய்மை எச்சமயத்துக்குரித் தெனின், ஒவ்வொரு சமயியுந் தனக்கேயுரித்தென்று கூறுவன். அதற்கேற்ற நியாயங்களையும் விவகரிப்பன். இவருள், தானே கடவுள் என்று சொல்லுகிறசமயியே அதற்கு அதிக பாத்யதை யுடையனாக ஆடம்பரங்காட்டித் தன்னுடைய மதம் வேதாந்த மதம் என்று சொல்லித் திரிகுவன். இவனுக்கும் வேதவேதாங்கங் களுக்கும் வெகு தூரம். வேதாந்தத்தில் முதலுபநிஷத்து ஈசா வாஸ்யம். இதில், முதற்கட்போந்த ஈசபதத்திற்கு ஆத்மா என்று பொருளுரைத்தனர் சங்கராசாரியர். ஆத்மா என்பது ஜீவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/38&oldid=1590079" இலிருந்து மீள்விக்கப்பட்டது