உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் 26

பிரதிபாதிக்கும் பதம். ஈசபதத்தை ஜீவவாசகமாகப் போதிப்பது என்ன மதம்? நானே கடவுள் என்னும் அஸங்காத்மவாதமாகத் தட்டில்லையன்றோ? இப்படியே வைஷ்ணவர்கள் ஈசபதத்தை விஷ்ணுவாசகமாகப் போதித்திடுவர். பிறருந் தத்தமக் கியைந்த வாறே போதியாநிற்பர். சித்தாந்தசைவர்கள் (எம்மவர்) ஈசபதத்தை ஈசவாசகமாகவே யுபதேசித்திடுவர்.

13

என்னு நிகண்டு வசனத்தால் ஈசபதம் சிவவாசக மென்பது ஸர்வஸம் பிரதிபந்நமாம். இதனால் ஈசாவாஸ்யமுத லெல்லா மன்பது

சிவைகநிஷ்ட

சால்

வுபநிஷத்துக்களுஞ் லாமேயமையும். இவ்வுண்மை தெளிந்தார் வேதாந்தம் யாருடைய சொத்து? அது யாருக்குச் சொந்தம்? என்பதை அறியாமற் போகார்? சொந்தக்காரராகிய யாம் (சைவர்கள்) எமது மதம் வேதாந்தம், யாம் வேதாந்திகள் என்று சொல்லிக் கொண்டு திரிவதில்லை.“எல்லாம் பொய் நான்மாத்திரமே மெய்” என்று பித்தேறியுரைத்து "வேதமுமித்தை கீதமுமித்தை வேதாந்த முமித்தை" என்று சூனியவாதம் பேசு மிச்சாவாதி கண் மதம் வேதாந்தமாதலும், அன்னோர் வேதாந்தி களாயிடுதலும் யாங்ஙனம்? இன்னோரது அமங்கலங்களைக் கண்ட எம் பெரியார் “மாயாவாதிகள்” என்று இவர்களைச் சுட்டி விவகரித் திடுவர். அப்படியே யாமும் விவகரிப்பாம்.

ம்

இம் மாயாவாதிமதத்தில் பிரமமொன்றே சத்திய மென்றும், ஜகஜீவபரங்கள் மிச்சையென்றுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது. ஜகமென்பது தேகேந்திரியாதிகள், ஜீவ னென்பது அத் தேகேந்திரியாதிகளைத் தாங்கிய சேதனன். பரம் என்பது அந்தச் சீவனுக்குத் தேகேந்திரியாதிகளைக் கொடுத்த சேதனன். பொய்யாகிய இம்மூன்றனுள். ஜீவனே ஜநநமரணப்பட்டு வருந்துகின்றான் என்று அம்மதத்தினர் கூறுகின்றனர். இந்த ஜீவன் ஜலசந்திரனாக வுவமிக்கப் பட்டிருக்கின்றனன். ஆகாயத்திலுலாவுஞ் சந்திரன் ஒரு கடத்தினிறைந்த நீரிற் பிரதிபிம்பித்த போது, அந்த நீரிற் றோன்றிய சாயையே சந்திர பிரதிபிம்பமென்பதாம். இந்தச் சந்திர பிரதிபிம்பம் கடத்தில் சத்தியமானதன்று. இது அந்தக் கடத்தினின்றுந் தாண்டி வேறு கடத்திற் புகுத மாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/39&oldid=1590080" இலிருந்து மீள்விக்கப்பட்டது