உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

7

அந்தக்கட முடைந்தவழி அத்தோடே போய் விடுவதாம். வேறு கடமொன்று ஆண்டுக் கொணர்ந்திடின் அந்தச் சந்திர பிம்ப மதிற்றோன்றுமெனின், வேறு கடத்திற்றோன்றிய சந்திரபிம்பம் மூலசந்திரனுடைய தேயன்றி உடைந்த கடப் பிரதிபிம்ப சந்திரனுடையதன்று. இதனைப் பரியா லோசிக்கையில், மாயாவாதஞானிகள் மறுபிறப்பை யொப்புதற் கிடமேயில்லை.

இனி ஒரு புருஷனிறந்ததாகக் கொள்வோம். இவனை ஜலசந்திரன் கடத்வம்ஸத்தி லழிந்து போயினதற்கே யொப்பி டுவர் விவேகிகள். அதனால் அழிந்துபோன ஜலசந்திரன் மற்றொரு கடத்திற் புகுத மாட்டாதவாறு போலத் தேகமழிந்த புருஷன் வேறுதேகத்திற் புக்கு மறு பிறப்பெய்தினானெனல் கூடாது. அன்றியு மிவன் சொர்க்க நரகங்களை யடைவதுங் கூடாது. ஜநந மரணங்களையும் சொர்க்க நகரங்களையும் ஜீவனுக் கொப்பிய வேதமுதலிய கலைகளை மாயாவாதி களவாடின மையால், அக்கலைகள் தனக்குப காரஞ்செய்வதும், அல்லது அபகாரஞ்செய்வது மறியாமல் வெளிவந்து கெடுகின்றான். இவன் குடாகாய மகாகாய முதலிய வுவமைகள் தேடுவதும் இவ்வாறே யழிகின்றன வென்க.

.

னி அதிஷ்டான சந்திரனோடுவமித்த பிரமத்தைச் சிறிது விசாரிப்பாம். சந்திரன் கடநீரிற் பிரதிபலித்தது போல் பிரமம் தேகாந்தர்க்கதமாகிய அந்தக் கரணத்திற் பிரதி பலித்ததெனின், சந்திரன் கண்டரூபி. கடநீர் முதலியன அந்தச் சந்திரனுக்கு வேறாயுள்ளவை. பிரமம் அகண்டமாயுள்ளது. உருவமற்றது. அதற்குவேறா யொரு பொருளுமின்று. இவற்றை யுணர்ந்திடுவார் பிரமம் அந்தக் கரணத்திற் பிரதிபலித்தது என்பதை யொப்புவதெங்ஙனம்? இவரிம் மட்டிலமையாமல் அகம்பிரமம் என்று கூறுவர். இவ்வாறு கூறும் ஒவ்வொரு மாயாவாதியும் தேகச்சுமை சுமந்திருக்கக் கண்டோம். பிரமமோ தேகச் சுமையற்றது. தேகச் சுமை தாங்கிய மாயாவாதி பிரதி பலநப் பிரமமேயன்றி அதிஷ்டானப் பிரமமன்று. அதிஷ்டானப் பிரமமல்லாத தான் அகம் பிரமமென்பது கூடாது. பிரமம் தன்னை அகம்பிரமம் என்று கூறிக் கொள்ளவு மாட்டாது. அவ்வாறு அது கூறிக்கொள் வதற்கு அதற்கு வாக்குமுதலிய கரணங்களுமில்லை. இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/40&oldid=1590081" இலிருந்து மீள்விக்கப்பட்டது