உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் - 26

பிரமம் பரிபூரணப் பொருளாகையால், தேகச்சுமை தாங்கிய யாமும் பிரமமாயிடுதல் கூடுமென்று அவர் வாதிக் கலாம். பிரமம் பரிபூரணமாயின், தம்மை அவர் பிரதி பலநப்பிரமமென்றது பிழையாம். தமக்குத் தேகச்சுமையை யொப்பியதும், ஜநநமரணங்கள் கூறியதும் மிகையாம். ஜநநம் என்பது ஆன்மா ஒரு தேகத்தை யடைதலும், மரணம் என்பது அது அந்தத் தேகத்தை விடுதலுமேயாம். அவ்வாறு கொள்ளுங்கால், அவ்வான்மாவுக்குப் போக்குவரத்துக் கூறப்படும். இவ்வான்மாவைப் பிரமமாகக் கொள்ளுங்கால், பிரமம் போக்குவரத்தில்லாதது என்னுஞ் சுருதி பொய்ப் பட்டுப்போம். அன்றியும், ஆன்மா வொரு தேகத்திலிருந்து ஒன்றை யறிகையில், கண்ணின் வழியாக வறிந்தபோது காதின் வழியாகவும், காதின் வழியாக வறிந்தபோது கண்ணின் வழியாகவும் அறியாது. இரண்டிந்திரியங்களி லொரேகாலத்தில் வியாபியாது என்பது முடிவு. இரண்டிந் திரியங்களில் வியாபித்து ஏக காலத்தி லிரண்டு விஷயங்களை யறியமாட்டாத ஆன்மா எல்லா விந்திரியங் களிலு மொக்க வியாபித்து எல்லாவிஷயங்களையு மேக காலத்தி லறியு மென்பது கூடாதாகையால், ஆன்மாவைப் பரிபூரண மென்றும், அதுதான் பிரமமென்றுங் கூறுவது அபசித்தாந் தமாய் முடிந்தது. அன்றியும், அவ்வான்மா வொன்றினை யறிகையில் இந்திரியங்களின் சம்பந்தங் கேட்கப்படுகின்றது. இந்திரியங்களின்

சேர்க்கையின்றி யொன்றினை யறிய மாட்டாத வதனைச் சுதந்திரவறிவாகிய பிரமம், அல்லது சிவம் என்றிடலுந் தவறுடைத்தாம். ஒரு தேகத்திலேயே முழுதும் ஏககாலத்தில் ஆன்மா வியாபி யாமையால், அது உலக முழுதும் வியாபித்தது என்று கூறுதற் கிடமேயில்லை. ஆகையால், ஆன்மா வியாபக முடைய தென்பது அழிந்தது.

னி, வியாபகம் அல்லது பூரணம் என்பது ஒன்றா யிருந்தபிரமம் பலவாக விரிந்த நிலைமையென்பது என்று அவர் பொருள் விரிக்கின்றனர். அங்ஙனமாயின், அது இப்போது விரிந்த நிலைமையினின்றும் இன்னு மதிகமாய் விரிதலுங் கூடும். அன்றியும் ஒன்றாயிருந்த அது பலவான காரணம் யாதென்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/41&oldid=1590082" இலிருந்து மீள்விக்கப்பட்டது