உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

9

மாசங்கையுமுண்டாம். பலவென்னும் பிரசங்க முண்டா குகையில், ஒன்று கெடுதலும் அவர் மதத்துக் கிடர் தேடியதாம். ஒன்றாயிருந்தவதனை ஒன்று என்று கூட்டியது யாவர்? அதற்கு வேறாயொரு பொருளில்லாத போது அதனை ஒன்று என்று சுட்டுதற்கிடமேது? சுட்டிய பொருளுண்மையால் அவ்வாறு சுட்டியபொருளும், சுட்டப்பட்ட பொருளும் ஒன்றாயிடுதல் யாங்ஙனம்? அன்றியும் ஒன்றா யிருந்தது பலவாகியதெனின், ஒன்றாயிருந்தது கண்டமும், பலவாய் விரிந்தது அகண்டமுமாம். அதனால் அவ்வொன்று பலவாயிடுதற்குப் பூர்வம் அதற்குப் பூரணத்துவமில்லையாம். இம்மட்டோ, அவ்வொன்று பலவாய் விரிந்ததென்னுங்கால், அது முன்னர் வியாபித்திராத விடத்தி லேயே பின்னர் வியாபித்திடல் வேண்டும். ஒரு வித்து அங்கு ரித்து விருக்ஷமா குகையில் அதனது சாகோபசாகைகள் தழைக் கின்றன. அவ்வாறு தழைத்து வியாபிப்பது அது முன்னரில்லாத இடத் திலேயேயாம். அந்த இடம் ஆகாயமேயாம். அவ்வா காயத்தில் வியாபிப்பதெல்லாங் கண்டப் பொருள்களாம். அகண்டமாகிய ஆகாயம் தனக்கு வேறாயுள்ளவோரிடத்திற் புதுசாய்ச் சென்று வியாபியாது; வேறு இடமில்லாமையால் அன்றியு மவ்வாகாயம் அதற்கு விஜாதியான பலபொருள்களாக விரிந்ததுமின்று. இதனைத் தெளிந்தவர்கள் பிரமம் பலவாய் விரிந்தது என்பதை வித்தானது மரமாகிச் சாகோபசா கைகளாய் விரிந்ததற்கே யொப்பிடுவரென்க. மரம் கண்டமாயினவாறு பிரமமுங் கண்டமாயொழியத் தக்கதென வொதுக்கவும் பின்னிடை யார்கள். மரமானது தான் முன் வியாபியாதவிடங்களிலேயே (சாகைகளாகத்) தழைத்து வியாபித்தது போலப் பிரமமுந் தான் முன் வியாபியாத விடங்களிலேயே(தழைத்து) விரிந்ததெனவுங் கூறமுந்துவார்கள். பிரமம் ஆகாயத்தானத்திலே யுவமிக்கப் படுவதாகையால், ஆகாயம் விரிதற்கு வேறிடமில்லாதவாறு போலப் பிரமம் (பலவாக) விரிந்திடற்கு வேறிடமில்லை யென்று தெளிக. அன்றியும், அவ்வாகாயம் தனக்கு விஜாதி யான பல பொருள் களாக விரிந்திடாதது போலப் பிரமமுந் தனக்கு விஜாதியான பலபொருள்களாக விரிந்திடா தென்பதுஞ் சித்தாந்தமாயின

L

துணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/42&oldid=1590083" இலிருந்து மீள்விக்கப்பட்டது