உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

10

மறைமலையம் - 26

பான்

L

இனிப் பிரமமேயுள்ளது, அஃது வேறு இடத்தில் வியாபித்ததின்று என அவர் கூறலாம். அப்போது அப் பிரமம் வியாபகப் பொருளென்னும் வாதம் நசித்திடும். அது மெய்யா கையால், மரம் சாகைகளாய் வியாபிக்க இடங் கொடுத்த ஆகாயத்தைப் போலப் பிரமம் பல பொருள்களாய் வியாபிக்க இடங்கொடுத்த வேறொரு பொருளினிருப்பும் அப்பிரமத் துடன் அநாதியா யொப்ப வேண்டிய பொறுப்பு அவர்தலை மேல்வந்து விடியாமற் போகாது. அன்றியுமவர் பொன் பணிகளாயினவாறும், பால் தயிராயினிவாறும், கடல் அலை குமிழிகளாயினவாறும் பிரமம் பலவாயின தென்று கூறுவர். அதுவுங் கூடாது; ஏனெனின், பொன்னைப் பூணாக்கிப் புனைவாரில்லாதபோது அந்தப் தானே பூணாகமாட்டாது. பொன் பூணாயின பின்னர்ப் பூணென் பதேயன்றிப் பொன்னென்னும் பெயர் அதற்குண்டாயின தின்று.பொன் பூணாயினவிடத்தும் அந்தப் பூண் பொன்னின் றன்மையினின்றும் மாறியதின்று. இப்படியே பாலைத் தயிராக்கிப் பருகுவாரில்லாதபோது அந்தப்பால் தா னே தயிராக மாட்டாது. பால் தயிராயின பின்னர் தயிரென்பதே யன்றிப் பாலென்னும் பெயர் அதற்குண் டாயினதின்று. பால் தயிராயின பின்னர் அந்தத் தயிர் மீண்டும் பாலாயினதின்று. இனிக் கடலிற் காற்றில்லாத போது அலைகுமிழிக ளதிலாக்கப் பட்டவாறில்லை. காற்று என்று மோயாமையால் அலை குமிழிகள திலங்கியவாறுமில்லை, கட லிலுண் L டாகிய அலைகுமிழினக் கடனீரா யிருப்பதன்றி வேறு பொருளாயின கடனீராயிருப்பதன்றி தில்லை. இவ்வுபமான ஸாத்ரு சங்களோடு பிரமம் பலவாயிடுத லாகிய பரிபூரணத் தன்மையை நிறுத்த வேலாமையால், பிரமம் உலகுயிர் களாகியும், உலகுயிர்கள் மீண்டும் பிரமமாகியும் நிலைபெறுதற்கேற்ற தகுதியமைந்த வுபமானந்தேடிப் பூர்வ பட்சிகள் தமது மதத்தை நிறுத்திக் கொள்வது ஆவசியகமாம். எவ்வித வுபமானந் தேடினும் பிரமத்தினது பரிபூரணத்வம் அவர் கூறியபடி சித்தியா தென்பது சித்தம். வியாபகம்- வியாப்தி-வியாப்பியம் என்னுஞ் சொற்பாகுபாடு களினுண் மையுண ராத கொடுமையே அவர்க்கு வீணவதியை விளைந்ததென்க. நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/43&oldid=1590084" இலிருந்து மீள்விக்கப்பட்டது