உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

11

அவர் வியாபகங்கூறியது பிரமத்துக்கென்று விவகார முண்டாயினும், அந்தப் பிரமம் ஆன்மாவைத் தவிர வேறில் லையென்பது அவரது மதமாய் முடிந்தமையின், அவ் வான்மா விபுவாகாமையை மேல் யாமுணர்த்திய துணர்ந்தவர்கள் அவர் கூற்று இழிகூற்றென்றெண்ணி யொதுக்கப் பின்னிடையா ரென்க. இதுகாறுங் கூறியவுண்மைகளால் ஜநநமரணங்களைத் தாங்கிய பொருள் பிரதிபலந சைதன்யமாகிய ஜீவனா? அதிஷ்டாந சைதன்யமாகிய பிரமமா? என்றா சங்கித்த விஷயம் பரிஷ்கரிக்கப்பட்டு, இரண்டுமல்ல வென்று நிச்சயிக்கப் பட்டமையால், இவ்விரண்டுமல்லாததும், அநாதிநித்திய மானதும், கிஞ்சிஜ்ஞத்வாதி யிலக்கணங்களோடு கூடிய பாசவீக்கமுடையதுமாகிய பசு வென்னும் ஆன்மாவே ஜநந மரணப்பட்டு வருந்துந் தன்மைத்து என்று கூறுவர். பெரியோ ரென்க. இதனால் பிரமமொன்றே சத்தியம், ஜகஜீவபரங்கள் மிச்சை என்று பேசிய பொய்வழக்கு அபஜயமடைந்ததறிக.

இம் மாயாவாதி மதத்தில் பிரமத்தினிடத்தில் ஜகஜீவ பரங்கள் கற்பிக்கப்பட்டனவென்றும், பிரமம் சத்தியமென்றும் சொல்லப்படு மாபாசத்தில் முன்னர்ப் பிரமத்தையும் ஜீவனையும் விசாரித்து முடிவு செய்தோம். ஏனைய ஜகம் பரம் என்பவைகளை யிப்போது விசாரித்து முடிவு கூறுவாம். ஜகம் என்பது ஜீவனைப் போலப் பொய்ப் பொருளென்று அம்மதத்தினர் கூறுகின்றனர். எங்ஙன மெனின்; பழுதையிற் பாம்பும், கட்டையிற் கள்வனும், சுத்தியில் ரஜிதமும், கானலில் நீரும், ஆகாசத்தில் தாமரையும், முயலிற் கொம்பும், கனவிற் பட்டணமுந் தோன்றியவாறு பிரமத்தின் உலகந் தோன்றியது என்பதேயாம். பிரத்யக்ஷமா யிருந்து காண்டு உயிர்களுக்குச் சுகதுக்கங்களைத் தந்து அநுபவ வேத்யமாயிருப்பதொன்றை இல் பொருளென்று சொல்லி அதனோடு ஒருவித சம்பந்தத்தையும் பறாத சில வாபாசவுவமைகளைத் தேடியுரைத்து உலகத்தை வஞ்சிப்பது

பெருங் கொடுமையேயாம்.

இவர் தேடிய வுவமைகளில் முதல் பழுதையிற் பாம்பு தோன்றியது போலப் பிரமத்திலுலகந் தோன்றிய தென்பது கேவலம் அஸங்கதம். எங்ஙனமெனின், பழுதை பாம்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/44&oldid=1590085" இலிருந்து மீள்விக்கப்பட்டது