உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் - 26

போது இப்போது

கண்டதின்று. பழுதையிற் பாம்பைக்கண்டவன் அப்பழு தைக்கு வேறாயுள்ள வொருபுருடன். இந்தப் புருட னிதற்குப் பூர்வம் நேரிற் பாம்கைக் கண்டிராத போது இப்போது பழுதையிற் பாம்பைக் காணமாட்டான். இப்படியே பிரமம் உலகத்தைக் கண்டதின்று. பிரமத்தி லுலகைக் கண்டவன் அப்பிரமத்துக்கு வேறாயுள்ள வொரு ஜீவன். இந்தச் சீவனிதற்குப் பூர்வம் உலகத்தைக் கண்டிராத பிரமத்திலுலகத்தைக் காணமாட்டான். பூர்வம் உலகத்தைக் காண்டலாவது ஆன்மா அநாதியே மலமாயாதி சம்பந்தங் களைப் பெற்றிருத்தலாம். சிவம் அல்லது பிரமம் வியாபகத்தால் தன்னிடத்திலுள்ளும் புறம்புங் கலந்திருந்தும், தான் (அதாவது ஆன்மா) அச்சிவத்தைக் காணாமலுலகத்தைக் கண்டுழலாநின்ற தெனவறிக. இதனால், பழுதை-பதியும், பாம்பு-பாசமும், கண்டவன்-பசுவுமாகக் கொண்டு பதார்த்தத் திரயநிரூபணஞ் செய்திடுதலே யமைவுடைத்தாம். இவ்வுப மானத்தால் ஏகாத்மவாதம் நிலைபெறாதழிந்தது. இதனை யோராது பழுதை, பாம்பைமுன்கண்ட வாசனை, கண்டவன் இம்மூன்றுங் கூடியபோதுண்டான அநுபவத்தைப் பிரமந் தனித்து ஏகமா யிரண்டாவ தெண்ணுக்கே யிடமில்லாது விளங்கிய வவசரத்தி லொட்டி யுரைப்பது யாங்ஙன மிசையும்? இப்படியே கட்டையிற் கள்வன், சுத்தியில் ரஜிதம், கானலில் ஜலம் என்று கூறு முவமைகளுந் தலைதடுமாறிய தறிக. இனி ஆகாயத்தில் தாமரை, முயலிற் கொம்பு என்பவைகள் சொன்மாத்திர மாயுள்ளவை. இவை மேலுவமைகளை விரோதிக்கின்றன. முந்தியவை கண்ணுக்கு விஷய மாகத்தக்கன. பிந்தியவை கண்ணுக்கு விஷயமாகாதன. இவை யெப்படியோ வொன் றோடொன்று வாழ்ந்து வொரு விஷயத்தைச் சாதியா நிற்கும்? இம்மட்டோ, இவர்கள் கடைசியாகத் தேடிய கனவிற் பட்டணம் என்பது முன்னிரண்டையும் விரோதிக்கின்றது. எங்ஙனமெனின், முதற்கட்போந்த விரண்டும் ாக்கிர காலத்தின. பிந்தியது சொப்பனத்தினது. ஜாக்கிராநுபவமும் சொப்பனா நுபவமும் ஒருபடித்தின வாகா. ஒன்றோடொன் றிகலி வேறு பட்டு விளங்குமுப மானங்கள் பிரமத்தி லுலகந் தோன்றிய தென்பதற்குப் பிரயோஜனப் படுமென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/45&oldid=1590086" இலிருந்து மீள்விக்கப்பட்டது