உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

13

சுத்தப்பொய்யாம். இதனை யிவர்கள் சாதிக்க வேண்டிப் பல கரணம் போட்டுப் பார்க்கிறார்கள். அது ஒருவன் ஒரு பொய்யைச் சாதித்தற்கு வேறு பல பொய்களைத் தேடி யிடர்ப்படுதலுக்கே பொருத்த மாயதென்க. இதனை யிம்மட்டினிறுத்தி இவர்கள் தேடிய பரனதியல்பைச் சிறிது ஆராய்வாம்.

இவர்கள் பரமென்று கூறுவது இவரது பிரமம் மாயை யிற்றோய்ந்த பிரதிபலனமாம். எங்ஙனமெனின், மூலப் பிரகிருதியென வொன்றுளது. இதுவே மாயையாம். இது ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமா யுள்ளது. இதற்கு வெண்மை, செம்மை, கருமை நிறங்களையுடை மூன்று புரிகளால் பின்னிய ஒரு கயிற்றின் தோற்றமே நிதரிச னமாம், வெள்ளைக்கயிறு போல்வதாகிய சத்வத்தில் தோய்ந்த பிரமம் விஷ்ணுவும், செவப்புக்கயிறு போல்வதாகிய ரஜஸில் தோய்ந்த பிரமம் பிரமனும், கறுப்புக்கயிறு போல்வதாகிய தமசில் தோய்ந்த பிரமம் உருத்திரனும் ஆயிடுதல் இவர்களது மதம். இவ்வாறு கொண்டு கூறுமிவர்கட்கும் அப்பிரமம் குணரகித மாயுளதென்பதும், விஷ்ணுமுதலினோர் குண மூர்த்திகளா யுள்ளவர்களென்பதும் சித்தாந்தமாம். இனி யிவர்களா லேக மென்று சாதிக்கப்படும் பிரமத்துக்கு வேறாக மூலப்பிர கிருதியிருப்பதும், அது முக்குண வடிவமாயிருப்பதும், அம் முக்குணம் மூன்று விதமாயிருப் பதும் பேராச்சரியமாம். இதனால், மூலப் பிரகிருதி அநாதி நித்தியமென்னும் பட்சம் வேரூன்றிப் பிரஹ்மேதர வஸ்து வில்லையென்னுந் துர்வாதம் நசித்ததறிக. நிற்க.

பிரமம் மூலப்பிரகிருதியிற் றோய்ந்தபோது அப்பிரமத் துக்கு உருவங்கேட்கப்பட்டதின்று. அது கேவலம் சேதனஸ் வரூபமாம். அரூபமும், சேதனமுமாகிய அது மாயையிற் றோய்ந்தகாலத்துப் பிரம விஷ்ணு ருத்ரர்களாகிய வுருவ மூர்த்திக ளுண்டானார்களென்பது யாங்ஙனம்? இம்மூர்த்தி களுக்கு அசேதனவுருவத் திருமேனிகளும், சேதனஸ்வ ரூபமுங் கேட்கப்படுதலா லொருக்கா லிவர்களது சேதனத்தை வேண்டு மாயின் பிரமத்தின் பிரதி பலனமென்று கூறலாம். அப்போது மொரு பாதகமுண்டாகின்றது.என்னெனின், அரூபமாகியவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/46&oldid=1590087" இலிருந்து மீள்விக்கப்பட்டது