உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் - 26

பிரதிபலிக்க மாட்டாதென்பதனோடு பிரதிபலனம் பொய்யா யொழிந்திடுதலு முண்மையாதலறிக. அதவா பிரதிபலித்த தாகவே கொள்வாம். அதிஷ்டான மெப்படியோ, அப்படியே யன்றோ பிரதிபலனமு மிருத்தல் வேண்டும்? அங்ஙன மின்றிப் பிரமனுக்கு நான்குதலையும், விஷ்ணுவுக்கு ஒரு தலையும், உருத்திரனுக்கு ஐந்து தலையுங் கேட்கப்பட்டாவா றென்னை? அம்மட்டில மையாமல், பிரமனுக்கு எட்டுக் கண்ணும், விஷ்ணுவுக்கு இரண்டு கண்ணும், உருத்திரனுக்கு மூன்று கண்ணும் பிரஸ்தாபிக்கப் பட்ட வாறென்னை? அவ்வளவிலுமமை யாமல், பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் நான்கு தோள்களும், உருத்திரனுக்கு எட்டுத் தோள்களும் நிர்ணயிக்கப் பட்டவாறென்னை? அன்றியும் பிரமனுக்குச் செவப்பு நிறமும், விஷ்ணுவுக்குக் கறுப்பு நிறமும், உருத்திரனுக்கு வெள்ளை நிறமும் நிச்சயிக்கப் பட்ட வாறென்னை? இத்தகைய பல வேறு பாடுடைய திரி மூர்த்திகளை ஒரு விகாரமு மெய்தாத பிரமத்தின் பிரதிபலன மென்று கூறுதற்கு யாது நியாயம்? இவற்றைக் கூர்ந்தறியும் விவேகிகளுக்கு இம் மாயாவாதிகள் கூறும்பரத்தின்றோற்றம் கேவலம் ஆபாச மாகவே தோன்று

மென்க.

ஒருகால் அவர்கள் ஸத்வரஜஸ்தமசுக்களைத் திரிமூர்த்தி களினுருவத் தோற்றங்களுக்குக் காரணமாக வுரைக்கலாம். அப்போதும் அவரைத் தொடர்ந்தலைக்கும் பாதகம் விட்டதின்று. எங்ஙனமெனின், சத்வம் வெண்மை நிறம். இதிற்றோய்ந்த பிரமம் கறுப்பு நிறத்தோடு விஷ்ணுவாகப் பவித்ததென்னை? இரஜசு செவப்பு நிறம். இதிற்றோய்ந்த பிரமம் செவப்புநிறத்தோடு பிரமனாகப் பவித்ததை யாமாட் சேபிக்கவில்லை. இனித் தமசு கறுப்பு நிறம்.இதிற்றோய்ந்த பிரமம் வெள்ளை நிறத்தோடு உருத்திரனாகப் பவித்த தென்னை? இப்படி விவகார விரோதமாய் நியாயத்தோ டொட்டியு மொட்டாமலும் பிரமம் திரிமூர்த்திகளின் றோற்றத்துக்குக் காரணமாய் நின் றன்மை பாலிசர்சிரிக்கவே இடஞ்செய்கின்றது. இது நிற்க.

இந்த மூன்று மூர்த்திகளும் புருஷரூபந் தாங்கியுள்ள வர்கள். இவர்களுக் கதிஷ்டானமான பிரமமோ ஆணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/47&oldid=1590088" இலிருந்து மீள்விக்கப்பட்டது