உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

டதின்று.இதுவும்

15

பெண்ணும் அலியு மல்லாதது. இது என்ன விந்தை? இந்த மூன்று மூர்த்திகளுக்குந் தனித்தனி மூன்று ஸ்திரீகள் கேட்கப் படுகின்றனர். இவருள், செவப்புநிறமுடைய பிரமனுக்கு ய வள்ளை நிறமான ஸ்திரீயும், கறுப்பு நிறமுடைய விஷ்ணுவுக்குப் பொன்னிறமான ஸ்திரீயும், வெள்ளை நிறமுடைய உருத்தி ரனுக்குப் பச்சை நிறமானஸ்திரீயும் அமைந்தவிதம் எப்படி? இவர்களுடைய வுற்பத்தி கற்பிதத்திற் கற்பிதமாம். இதனை விரிக்கிற் பெருகும். இம் மும்மூர்த்தி களுக்கும் பத்தினிகள் கேட்கப்பட்டவாறு இவர்களுடைய ய பிரதிபலனத்தின் அதிஷ்டானமாகிய பிரமத்துக்கு ஒரு மனைவியுங் கேட்கப் பட்டதின்று. இதுவும் விந்தையாம். பிரதிபலித்த பொருளுக்கு அவ்வாறு பிரதிபலித்த இடத் திலன்றிப் புடை பெயர்ச்சியும், வேறிடத்திற் சென்றியங்குதலுங் கூடாவாறுபோலப் பிரதிபலன மூர்த்தி களாகிய பிரமனா தியர்களுக்கும் புடை பெயர்ச்சியும், வேறிடங் களிற் சென்றி யங்குதலும், மற்றொன்றினை யியக்கு தலுங் கூடாவாம். இங்ஙனமாகவும், அவர்களுக்குச் சிருட்டியாதி கிருத்யங் களையும், இராமகிருஷ்ணாதி அவதாரங்களையும், சர்வ வியாபகத்வாதி தர்மங்களையுங் கூறிய வேதாதிகளுக்கு யாது கதி? இம்மட்டோ? பிரமம் ஒருவித சங்கற்பமு மில்லாதது. இது பிரதிபலித்ததனான் மூன்றிடங்களிலொரே அவசரத் திலுண்டாகிய மூன்று மூர்த்திகளில் ஒருவருக்குச் சிருட் டியும், ஒருவருக்குத் திதியும், மற்றொருவருக்குச் சங்கார முந், தொழில்களாயினதும் ஆச்சரியமாம். இவர்களில், ஒருவரை யொருவர் வணங்கினாரெனவும், ஒருவரோடொருவர் பிணங் கினாரெனவும், ஒருவரையொருவ ருண்டாக்கினா ரெனவும், பின்னரழித்தாரெனவும் புராணங்கள் கூறுவதும் என்னாவது? வேத முதலிய கலைகளில் சிவபெருமானொருவரே கடவுள் அல்லது பிரமமெனவும், அவரா லுண்டு பண்ணப் பட்டவர்கள் பிரமன் முதலியோ ரெனவும், அவர்கள் பாசவயப்பட்டுழலும் பசுக்க ளெனவுங் கூறப் படுதல் சத்தியமாகையால், இப்பிரம னாதியர்களைப் பிரமத்தின் சாயையெனவாவது, அதனவ தாரமெனவாவது கூறி, ஜீவப் பிரஹ்மவாதிகளாகிய மாயாவாதிகள் திண்டாடுவது கேவலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/48&oldid=1590089" இலிருந்து மீள்விக்கப்பட்டது