உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் 26

பரிதாபமென்க. இதனால், அவர்கள் கூறும் பிரமலட்சணம், ஜகஜீவபரதர்மங்கள் முதலியயாவும் பரம நாஸ்திகப் பாஷண்ட போதமாய் முடிந்ததறிக. விரிக்கிற் பெருகும்.

என்னுமிதனை

எமது ஸ்ரீலஸ்ரீ

நாயகரவர்கள்

வெளியிட்டனர். இதன்மேற் சிலவாசகங்கைகளெழுப்பி ஒரு மாயாவாத நண்பர் விவகரித்தனர். அதற்குமேல் எமது சகோ தரரொருவர் சமாதானங் கூறினர். அவ்விரண்டனையும் ஈண்டு வெளிப்படுத்தி யுபகரிப்பாம்..

பூர்வபட்சம்

“பிரமத்தினிடத்தில் ஜகஜீவபரங்கள் கற்பிக்கப்பட்டன வென்றும், பிரமம் சத்தியமென்றும் சொல்லப்படும் ஆபாசத்தில்” என்று நாயகர் கூறியது யாங்ஙனம்? முன்னைய மூன்றும் எவ்வாறாயினும் பிரமம் சத்தியமென்றவர் கூறுவதும் சத்திய வாபாசமா?

சித்தாந்தம்

நாயகரவர்கள் ஆபாசமென்றது ஜகஜீவபரங்கள் பொய், பிரமம் மெய்யென்ற சித்தாந்தத்தையேயன்றிப் பிரமமாகிய வஸ்துவை மெய்யென்றதை யன்று. இவ்வாறு சுலபமா யாருமுணரத்தக்கதைத் தாங்கள் அந்யதா கிரகித்தது யாதோ? நாயகரவர்கள் பிரமம் பொய்யென்று யாண்டா யினுங் கூறியதுண்டாயின், தங்களாசங்கை பயன்படும். பிரமம் அல்லது பதி சத்தியமாவது போல ஏனைய பசுபாசங்களும் சத்தியமாயிடுதல் நாயகரவர்களது கொள்கை. இவ்வாறன் றிப் பதி சத்தியம், பசு பாசங்கள் பொய்யென்றது ஆபாச மேயாம்.

பூர்வபட்சம்

பழுதையிற் பாம்பு, கட்டையிற் கள்வன், சுத்தியி லிரஜிதம், கானலிற் சலம், ஆகாயத்திற் றாமரை, முயலிற் கொம்பு, கனவிற் பட்டணம் முதலியவைகளை ஆபாசவுவ மைகளென்று திரஸ்கரித்த நாயகர் “பழுதை பதியும், பாம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/49&oldid=1590090" இலிருந்து மீள்விக்கப்பட்டது