உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

17

பாசமும், கண்டவன் பசுவுமாகக் கொண்டு பதார்த்தத்திரய ன் நிரூபணஞ் செய்திடுதலே அமைவுடைத்து” என்று அங்கீ கரித்ததென்னையோ? ஒரு ஆபாசவுவமையைக் கைக் கொண் டவர் மற்ற ஆபாச வுவமைகளையுங் கைக்கொள்ளாமற் போவரோ?

நாயகரவர்கள்

சித்தாந்தம்

மேற்கண்ட

உவமைகளை

சைவ

யாபாசமென்றது மாயாவாதிகளது சித்தாந்தத்தை அவை நிறுத்து மியல்பு காணாமையாலென்க. அவ்வளவேயன்றி அவ்வுவமைகளை யொன்றோடும் புணர்த்திக் காட்டாத வவசரத்தில் ஆபாச மென்றதில்லையறிக. எமது சித்தாந்தத்திற்கே யொரு புடை யொத்தவுவமைகளென்று காட்டியது உசிதமேயாம். மாயாவாதி யுயிர்போலோம்பிய வுவமைகள் அவனுக்கிடர் விளைத்திடலா லாபாசமென்ற தமையுடைத்தே. எமக்கவை யிடர் செய்யாமையா லாபாசமாயினதில்லையறிக. பழுதை பாம்புவமை போல ஏனையெல்லாவுவமைகளு மெமக் கொப்பேயாமென்க

இவ்வாறு தெளிந்திடாமல் “பூர்வாபர விருத்தமா யெழுதினீர்கள்” என்று நாயகரவர்களைத் தாங்கள் குறை கூறியது உசிதமாயினதில்லையறிக. நிற்க.

பழுதையிற் பாம்பு தோன்றியது போலப் பிரமத்தி லுலகந் தோன்றியதென்பது அசங்கதம். எங்ஙனமெனின், பழுதை பாம்பைக் கண்டதின்று. பழுதையிற் பாம்பைக் கண்டவன் அப்பழுதைக்கு வேறாயுள்ள வொரு புருடன். இந்தப் புருடன் இதற்குப் பூர்வம் நேரிற் பாம்பைக் கண்டிராத போது இப்போது பழுதையிற் பாம்பைக் காணமாட்டான். இப்படியே பிரமம் உலகைக் கண்டதின்று. பிரமத்தில் உலகைக் கண்டவன் அப்பிரமத்துக்கு வேறாயுள்ள வாரு ஜீவன். ஜீவன். இந்தச் சீவனிதற்குப் பூர்வம் உலகைக் கண்டிராத போது இப்போது பிரமத்தில் உலகைக் காண மாட்டான். பூர்வம் உலகைக் காண்டலாவது ஆன்மா அநாதியே மலமாயாதி சம்பந்தங் களைப் பெற்றிருத்தலாம் என்று நாயகரவர்கள் தெரிவித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/50&oldid=1590091" இலிருந்து மீள்விக்கப்பட்டது