உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் 26

வுண்மையைத் தாங்கள் பாராதவர் போல நியாயம் பேசவந்தது தருமமா? மேற்காட்டிய மாயாவாதவாபாசத்திற்கு யாது பரிகாரந் தேடிக் கொண்டீர்கள்? உண்மையை நழுவ விட்டு விவகரித்த தாங்கள் உண்மைஞானப் பிரியன் என்று வெளி வந்தது உண்மையாவ தெங்ஙனம்?

பூர்வபட்சம்

சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் பேய்த்தேருபமானங் கூறியிருக் கின்றது. இதனை யெங்ஙனோ ஆபாசமென்றனர் நாயகர்?

சித்தாந்தம்

இவ்வுபமானம் சைவசித்தாந்தத்திற்கே யுரித்தென் பதைப் பாநுமூர்த்திக்கு வீரபத்திரமூர்த்தி உபதேசித்த பகுதியில் நன்கு பரிஷ்கரித்திருக்கின்றது. நீலலோசனியை வரித்துப் பார்த்துத் தெளிந்திடுக. எல்லாவுவமைகளு மெமக்கொப்பென்ற விடையாலும் இதற் கிறை தந்ததாயிற்று.

பூர்வபட்சம்

மாயாவாதிகூறு முவமைகள் ஜாக்கிராவஸ்தையிலும் சொப்பனாவஸ்தையிலுமுள்ள பொருள்களாதலால் ஜாக் கிராநுபவமும் சொப்பனாநுபவமும் ஒரு படித்தனவாகா என்ற நாயகர், சிவஞானபோதத்தில் நீரிலெழுத்து என்பதி லுள்ள வுவமைகளும் ஜாக்கிரசொப்பனகாலத்தி லுள்ளன வென்பது கொண்டு குறை கூறுவாரோ?

சித்தாந்தம்

ஜாக்கிரவுவமை ஆகும், சொப்பனவுவமை ஆகாது எனவாவது, அல்லது சொப்பனவுவமை ஆகும், ஜாக்கிர வுவமை ஆகாது எனவாவது நாயகரவர்கள் கூறியதில்லை. இரண்டு வமைகளும்உபமேயங்களுக்குத் தக்கவாறு பிரயோஜனப்படத் தக்கனவாம். எடுத்துக் கொண்ட வுபமேயத்தைச் சாதிக்க வேலாத விருத்தோபமானம் பயன் படாதென்பதே நாயக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/51&oldid=1590092" இலிருந்து மீள்விக்கப்பட்டது