உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 26

மனைவியுமாய்ச் சேர்ந்து வைத்துக் கொண்டோம் என்றானாம். அந்த யோக்கியதையுங் கூட இவ்விந்துவுக்குக் கிடைத்ததாய்க் காணப்படவில்லை. இவரைத் தவிர இவர் வெற்றி பெற்ற தாய்க்கூற வேறே ஆளைக்காணோம். இது தானோ வெற்றி? தோற்றவருங் கெலித்தவருந் தாமேயாகிய இவரது மதசொரூபந் தெரியாமல் ஒரு பொருளுள்ள விடத்தில் மற்றொரு பொருளிரா தென்றும், அவ்வாறு கூறுவது நாற்கோணத்தில் முக்கோண மடங்குவது போலென்றும் இறுமாப்படைகின்றார். நாற் கோணத்தின் எதிர்மூலை களிரண்டையு மிணைத்து ஒருகோடிழுக்கில் நான்கு முக்கோணங்களடங்கு மென்பது இவர் கற்றிலர் போலும். இது நிற்க. ஒரு பொருளுள்ள விடத்தில் மற்றொரு பொருளிருத்தல் கூடாதென்று ஒரு இரும்புக் குண்டுக்குள் மற்றொரு இரும்புக் குண்டமை யாதென்றும், ஒரு பெட்டிக்குள் சாமான்களிருத்தல்போ லென்னினும் பூரணத்வம் கெடுமென்றுங் கூறுகின்றனர்.

கைவல்ய மென்னுஞ்சுவடியில் "பொன்னில மாத ராசை பொருந்தினர் பொருந்தாருள்ளந், தன்னிலந் தரத்திற் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும்." என்று கூறப்பட்டிருக்கின்றது. இதில், “அந்தரத்திற் சீவகாட்சி மாத்திரமாய் நிற்கும்” என்றதற்கு ஆகாயமானதுமற்றை நான்கு பூதங்களையுமடக்கித் தான் தனியே நிற்பது போல என்று இவரது முன்னோர் பொருள் கூறினர். ஒன்றிலொன் றடங்காத நியாயங்கற்ற இவர் இந்த வுரையையும், மூலத்தையு மொதுக்கி வாழ்வார்போலும், இதைத் தழுவுவா ராயின், கொள்ளிக் கட்டையை யெடுத்துத் தலை சொரிந்து கொள்வது போலாம். இன்னுமிவரது ஆபாசத்தை ஸ்தாபிக்க அப்பும் உப்பும் சேருவது அணுக் களினியை பென்றார். கண்ணொளி சூரியனொளி திருட்டாந்த மெடுத்துக் கூறிக் கண்ணுக் கொளியில்லையென்றார். அப்படியு நில்லாது கண்ணுக்கு ஒளியிருந்தாற்றானென்ன என்று ஒருவாறு ஒத்துக் கொண்டவர்போலப் பேசிச் சிறுகாற்றும் பெருங் காற்றும் வேறுவேறாய்ப் பேதப் படுவதுபோல ஒளியும் பேதப்படு மென்கிறார். இவர் காற்றுண்டாகும் விதம் இன்னதென்றே யறியாதவர். கடவுளுக்குப் பூரணத்வம் வேறு பொருள்களிற் கூறக் கூடாதென்று திருட்டாந்த ரூபமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/69&oldid=1590110" இலிருந்து மீள்விக்கப்பட்டது