உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

என்னுந் திருவெண்பா அத்துவிதமினைத்தென்று கூறியது.

35

இவர் கைக்கொள்ளும் நூல்களில் அசிபத ஐக்கிய மென்பதொன்று கூறப்படுகின்றது. அந்த விடத்தில் ஏக பாவனையும் விட்டு, ஒன்றுமில்லாதிருக்குநிலையே முடிவெனக் கூறியிருக்கின்றது. இது ஏகவாதஞ் சாதிக்கும் அத்துவித மதமாவது யாங்ஙனம்? இதனை ஒன்று மில்லாத மத மென்றும், சூனியவாதமென்றுங் கூறுவதே மரபாம்.

இவரது அத்துவிதத்தால் தானே பொருளாகி நிற்றலால், தன்னைத் தவிர வேறே தெய்வமில்லையென்று சொல்லிக் கொண்டு எந்தப் பாதகத்தையுந் தைரியமாய்ச் செய்யலாம். இதைத் தவிர வேறு சாதனை இவரது மதத்தால் சித்தியாது. இவரது மதத்தின் பெருமை இவ்வளவு யோக் யதையிலிருப்ப தறியாது “துரீய சிவனிடத்திலிருந்து சிவன டியார் ருண்டாவ தெங்ஙன" மென்று தாம் கேட்டதற்கு எமது நாயகரவர்கள் விடையளிக்கவில்லையென்று கூறி மகிழ்கின்றார். அவர்களவ் வாறு விடைபகராதிருப்பின், இவரது கேள்வியை அருவருத்த படியாம். இவரைச் சித்தாகிய பிரமத்தினிடமிருந்து ஜடமாகிய ஜகமெவ் வாறுண்டாயிற் றென்று கடாவுங்கால் வகை தெரியாது விழிக்கநேருவதால் இக்கேள்வி கேட்டு இதற்குண் டாகும் விடையால் தாமும் வழிதேடிக் கொள்ளலாமென்று பார்த்தார் போலும். சித்தாந்திகள் கடவுளுக்கு உருவம், அருவம், உருவருவ மாகிய மூன்றுங் கொள்பவராதலால்

L

கடவுள் எவ் வடிவுங் கொள்ளலாம். இத்துணையுந்

தெரியாதார்க்கு விடைபகர்ந்தும் பயனின்றாதலால் நாயக ரவர்கள் ஒதுக்கி யிருக்கலாம். இவ்விடை வ்விடையை யுணர்ந்தாலும் மாறுபட்ட காள்கையின இவருக்கு யாதும்

பயனின்றாம்.

ராகிய

இனி, இவர் ஸ்ரீமது நாயகரவர்களோடு வாதப் போர் புரிந்து வெற்றியடைந்து விட்டதாய் வீரம் பேசி வெளியில் வந்தார். இந்த வீரம் எது போலிருக்கிறதென்றால், ஒருவன் தான் சபாஸ் பட்டம் பெற்றதாய் மீசையை முறுக்கி வெளியில் வந்தானாம். உனக்கு யாரிந்தப் பட்டங் கொடுத்தவ ரென்று கேட்டதற்கு ஒருவர் கொடுக்க வேண்டுமா? நானும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/68&oldid=1590109" இலிருந்து மீள்விக்கப்பட்டது