உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 26

நாணணிந்து கொண்டு புருடனு யிரோடிருக்கவும், அவன் இறந்தானெனப் பேசும் பெண்மணியோடுதானே இவர் சேரத்தக்கவரென்க.

இவரது தன்மையைச் சூதசங்கிதை பின்வருமாறு கூறுகின்றது.

66

“தீயமறை யவர்பொய்யே கற்பித்த

நிந்தை மொழி செவியிற கேட்டுத்

தூயதவத் திருமுனிவன் சிவசிவமற்

றிவரென்ன சொன்னா ரென்று காயழலிற் கண்சிவப்ப நனிவெகுண்டு செய்நன்றி கழியக் கொன்ற பாயவினை யம்மறையோர் முகநோக்கிக்

கொடுஞ்சாபம் பகர லுற்றான்.

பரசிவன்றன் சொரூபத்து மூர்த்தியினும்

பத்தியினும் பகர்நா மத்துந்

தரமிகுமெய்ஞானத்து மற்றவன்பொன்

னாலயநற் றரிச னத்தும்

வரமிகு விபூதியக்க மணிதரிக்குஞ்

செல்வத்து மற்று முள்ள

உரவுமிகு சிலவிடய மெவற்றினுநும் மனஞ்செல்லா தொழிந்து போக.”

என்னுஞ் சாபவாக்கியங்களைத் தெளிந்தவர்கள் பூர்வ பட்சியையும், அவரினத்தவரையும் வெறுப்பதிற்பயனின் றென்க. இன்னோர் தம்மை ஏனோ அத்வைதிகளென்று சொல்லிக் காண்டு உலகை வஞ்சிக்கின்றனர்?

சிவஞானபோதம்

“அதுவிது வென்ற ததுவல்லான் கண்டார்க் கதுவிது வென்றதையு மல்லான்--பொதுவதனி லத்துவித மாத லகண்டமுந் தைவமே அத்துவிதி யன்பிற் றொழு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/67&oldid=1590108" இலிருந்து மீள்விக்கப்பட்டது