உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

33

ஈசுவரகீதை-சிவசக்தியின் செயலுரைத்த வத்தியாயம்

எந்தநாளுமெனை யேநினைந்தவியல்

பாலேயென்னருளி னாலயன்

சந்தநாடரிய திவ்யமாமெனது

தன்மையாலவத ரிக்கிறா னந்தமாதியிலென் னேவலாலவனிவ்

வகிலலோகமும் மைக்கிறா

னிந்தநாரணண ளிக்குமாறுமிவ

னென்னில்வேறெனவி லாமையால்.

என்றும்,

சூதசங்கிதை முத்திகாண்டம்

என்றுதுதிப்பத் திருநெடுமா

லெதிரேதோன்றி யென் செய்தாய்

சொன்றியளிக்குந் தகுதியர்பாற்

சுரரூண்விரும்பு வாருளரோ

நன்றுமுத்தி விரும்பினையே

னம்மால் வணங்கப்படுங் கடவுள்

குன்று குழைத்துப் புரம்பொடித்த

குமுகன் சரணமடையென்றான்

என்றும்,

வேதாந்த மதவிசாரம்

சுவேதாசுவதா உபநிஷத்து

பிரமா நிலையற்றவர். சங்கார கர்த்தாவாகிய ஹரனோ நித்தியராயும், என்று முள்ளவராயுமிருக்கிறார். அவரைத் தவிர வேறே கடவுளில்லை. அவரே உலகத்தையும் ஆன்மாவையும் ஆளுகிறவர். என்றும் கூறுகின்றன.

இவற்றிற்கு விரோதமாக நமதுநண்பர் கூறுவது யாது பயன் கருதியோ அறியேம். விபூதியைத் தரித்துக் கொண்டு விபூதியைப் பொய்யென்றும், சிவபூஜை செய்து கொண்டு சிவனைப் பொய்யென்றும் பேசுவது பேராச்சரியமாம். மங்கல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/66&oldid=1590107" இலிருந்து மீள்விக்கப்பட்டது