உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் - 26

இவ்வுபநிடதவாக்கியத்தானே இவர் கொள்கை முற்றும்

அடியற்ற பனையாகியதறிக. இது உபநிடதவாக்கிய மன்றெனக் கூறுவாரோ? இது போன்ற உபநிடதவாக்கியங்க ளின்னும் பலவுள. இவர் அறியாமையால் வேதத்திற்குத் தோஷங் கற்பிப்பதைப் பிறர் கைக் கொள்ளார். இனி வேதத்தில் சில வசனங்களில் ஜகத்தை மித்தையெனக் கூறிய தென்னை யெனின், வேதம் பரிபாகநோக்கிப் பலவாறு கூறுமென்பதை முன்னரே வெளியிட்டனம். கண்ணை மூடிக் கொண்ட ஒருவனுக்கு உலகம் தோன்றாது. அதனால் உலகமில்லை யென்று சொல்லலாமா? அது போலச் சிவானுபூதிச் செல்வர் களுக்கு உலகந் தோன்றாது. அந்நிலையில் நிற்போர்க்குக் கூறியிருக்கும் வசனங்களைப் பொருளறியாது மயங்கித் தம்மவென வெடுத்தாண்டு புலம்பித் தவிக்கிறார். இவரது பரிபாகக் குறைவே இவரை மருட்டிக் கெடச் செய்கிறதென்க. இவருக்குப் பாகம் வரித்துத் திருவருள் துணை செய்யக்கடவது. நிற்க.

L

இனி இவர் கூறுவதில், ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் ஜல சந்திரனதுவமான மெடுத்துக் கூறிக் கண்டித்தது பிசகென்றும், அதைத் தம்மவர்களே பூர்வபக்ஷமா யொப்புக் கொள்ளுகிறார் களென்றுங் கூறுகின்றனர். மெத்தச் சந்தோஷம். இவரே பூர்வபக்ஷமென்று ஒப்புக் கொண்டால் நம்முடைய வேலையை இவரே எடுத்துக் கொண்டவ ராகின்றார். இனி, இவருடைய சித்தாந்தந்தான் யாதென்று பரியாலோசிப்பாம். பிரமவித்யா 16-ஆம் இலக்கப் பத்திரி கையில் “அந்த விவர்த்தவாத திருஷ் டாந்தங்களாகிய கயிற்றரவு, கானனீர், இந்திரஜாலம், சொப்பனவுலகு முதலியவை களுக்குள் சொப்பனவுலகே சித்தாந்தம்” என்கிறார். பின்னர் 18-ம் இலக்கப் பத்திரிகையில் பரஸ்பர விரோதமாய் “இது அத்வைதிகளுடைய கொள்கை யன்று, பின்னையாதெனின், கானல்நீர் அலையாதிகள் ஆதல் போலாம். இது தான் அத்வைதிகள் கொள்கை” என்கிறார். து முன்னர் கானல்நீர் திருஷ்டாந்தம் பூர்வபக்ஷமென்று கூறிப் பின்னரதனையே அத்வைதிகள் கொள்கையென்கிறார். இவரேழைமதிக்கு எதைத்தான் இணையாகச் சொல்லலாம்? இவரைப்போல யாமும் வசையகராதியிற் பயன்றிருப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/71&oldid=1590112" இலிருந்து மீள்விக்கப்பட்டது