உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

39

மாகில் அவ்வகை வசனங்களால் நிரப்பலாம். அவ்வாறின் மையால் இவரை இம்மட்டோடே விட்டொழித்து இவரது

முடிவு ஸித்தாந்த மென்று கூறும் சொப்பனவுலகு

விட்டார். இரவில்

தாம்

திருஷ்டாந்தத்தைப் பரிசோதிப்பாம். சொப்பனம் என்பது யாது? சொப்பனத்தில் விவகரிக்கும் ஜீவனுக்குத் தைசதனென்றும், அவன் கொள்ளுந் தேகம் சூக்குமதேக மென்றும், அவன் 25 கருவிகளோடு விவகரிக்கிறானென்றுங் கூறுவது என்னை? சொப்பனவுலகு பொய்யென்றாகுங்கால் தைசதனென்பதும், சூக்கும சரீர மென்பதும், கருவிகள் விவகார மென்பதும் பொய்யாய்த் தானே முடியும்? பொய்யாகிய விஷயங்களைச் சொல்லும் சாஸ்திரங்களும் பொய்யென் றல்லவோ முடியும்? அதனா லிவர்மதமும் ஆகாயத் ஆ தாமரையாமன்றோ? சொப்பனத்தில் கண்ட சில விஷயங்கள் மெய்யாய் முடிவதற்கு என்ன கதி? கணித பண்டிதராகிய டாக்டரொருவர் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துப் பகலெல்லாங் கஷ்டப்பட்டும் அது சரிப்பட வில்லை. அதனால் அயர்ந்து நித்திரைபோய் சொப்பனத்தில் அதனைக் கண்டு பிடித்து விட்டதாகக் கண்டு விழித்துப் பார்த்துச் சொப்பன மெனத் தள்ளி மறுபடியுந் தூங்கினார். காலையில் எழுந்து தமது மேசையின் பேரில் பார்க்கும்பொழுது அதே கணக்குத் தாம் சொப்பனத்திற் கண்டவண்ணமே தமது கையினால் எழுதப் பட்டிருந்ததைக் கண்டு வியப்புற்றார். இது போல எண்ணி றந்த திருஷ்டாந் தங்களுள. இவைகளுக்கென் சொல்லுவார்? ஜாக்கி ரத்திற் கண்ட பொருளே சொப்பனத்தில் விவகரிக்கிற தென்பது ஆன்றோர் கொள்கை. அன்றிச் சொப்பன மென் பது ஆன்றோர் மனோவிவகாரமேயாம். சிதம்பரத்தைப் பாராத ஒருவனுக்குப் பார்த்து வந்தவன் அவ்விடத்திய விசேடங்களைக் கூறிய காலையில் இவனும்போய்ப் பார்க்க வேணுமென்னுமவா னால் இவன் கேட்காத அனேக விஷயங்களையு மெண்ணி, ம னா ராஜ்யம் செய்கிறான். அவைகள் வாஸ்தவத்தில் அவ்விடத்தி லில்லை யாயினும் இவனது மனோ ராஜ்யம் பலவாறா யெண்ணும்படிச் செய்கிறது. அதுபோல நாம் பாராத அனேக விஷயங்களும் மனோராஜ் யத்தால் தோற்றுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/72&oldid=1590113" இலிருந்து மீள்விக்கப்பட்டது