உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் 26

முண்டு. அதனால் சிதம்பரம் உளதென்பது கெட்டுப் போக L மாட்டாது. இந்த மனோராஜ் யத்தால் காரியம் சிதைவு படாதாகையால் இதைப்பற்றி நாம் கவனிக்க வேண் ய ஆவசியகமில்லை. சொப்பனவுலகுக்கு மனது முதற்காரண மென்கிறார். ஜீவனில்லாதவிடத்து மனது எவ்வாறு விவகரிக்கும்? இதை ஏன் மறந்தனரோ அறியேம், மாயாவாத மயக்கத்தினால் தமக்குயிரிருக்கிற தென்பதையும் மறந்தனர் போலும். இதனால் திரிபதார்த்த நிச்சயமே வெளியாகிற தன்றோ? ஜீவன் உடலெங்கும் பரவி நிற்கவும், மனது அதன் சம்பந்தத்தால் வியவகரிக்குங்கால், அது அதன்சக்தியென்று வெளியாகிறது. இதுபோலவே சிவபரஞ் சுடர் சர்வ வியாபக மாயும். ஜீவனும் மாயையும் அதற்குள்ள டங்கி வியவகரிப்பவர் களாயும் பெறப்படு முண்மை சித்தம். இவர் முக்கிய பிரமா ணமாய்க் கொள்ளும் ஞானவாசிட்டத்தில் காதிகதையை இவர் பார்த்திருந்தா லிவ்வாறு பேச மாட்டார். அக்கதையில் சொப்பனம் நிதரிசனமாயிற்றென்றே நிரூபித்திருக்கின்றது. இவர் சொல்லுகிறபடி சொப்பனம் பொய்யென்பது சித்தாந்த மானால் அக்கதையை அடியோடே வாசிட்டத்திலிருந்து எடுத்துவிட வேண்டும். சொப்பனமும் கர்மத்துக்கீடாகவே அனுபவிப்பதொன்றாம். அதனைக் “கனவின்பயனும் நனவின் பயனும், வினையின்பயனவை பொய்யென வேண்ட என்றார் சித்தாந்தச் செல்வர்.

.

""

னி, இவர் வேதத்தைக் கைக்கொண்டவரென்றும், சித்தாந்திகள் வேதத்தைத் தூஷிப்பவர்களென்றுங் கூறி நடிக்கிறார். இவருக்கு வேதத்தின் சம்பந்த மெம்மட்டி லி ருக்கிறதென்பதையும் வெளியிடுவோம். வேதம் கரும காண்டம், ஞான காண்டமென இரு பகுப்புகளையுடையது. தில், கருமகாண்டம் யாகம் யோகம் ஈசுவரோ பாசனை களைக் கூறுமியல்பின. பிற்பாதியாகிய ஞானகாண்டம்

-

-

ம்

உபநிஷத்துக்களாம். இவரது அகம்பிரமவாதத்திற்கு யாக யோகங்கள் தூரமாயொதுங்குமியல்பின, யாம் மேலிடத்தில் உபநிஷத்துகள் இவர் கொள்கைக்கு மாறுபாடாகியவென நிரூபித்தோம். இன்னும் இவர் தமது மதச் சார்பென வெண்ணி எடுத்துதகரித்த உபநிஷத்துகளும் இவருக்குப் பயன்பட்டன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/73&oldid=1590114" இலிருந்து மீள்விக்கப்பட்டது