உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

41

வல்லவென்று விளக்கினோம்.மற்றை யுபநிஷத்துகளும் இவருக்குச் சம்பந்தமில்லாதனவாகவே யொழியும். இவ்வாறு யாவும் ஒழிதலால் இவரை வேதபாகிய ரென்று கூறுவதி யாதும் தடையில்லையென்க. இவர் நிற்க.

தினகரனென்பவரும் இம்மாயாவாதியாரது அத்வைத விசாரத்தைச் சிறிது பரிசோதித்திருக்கிறார். அதனையும் ஈண்டு வெளிப்படுத்துவாம். ஈண்டெடுத்துக் கொண்ட மாயாவாத நண்பர் இந்து வென்பவரே. இவர் தமது பெரிய பிரபந்தத்தில், ஸ்ரீ நாயகரவர்கள் போலீசுக்குப் போனா ரென்று முதல் ஒரு குறைவு கூறினார். அதனையீண்டுப் பரிகரித்திடுவாம். ஒரு வைணவர் திருவண்ணாமலை விஷ்ணு சேக்ஷத்திரமென்றும், அதனைச் சைவர்கள் களவாடினார் களென்றுங் கூறியதை மறுத்து, அவ்வாறு எழுதினவரை நன்கு விசாரியாத புருடன் என்று பொருள் படத்தக்க வொரு சொல்லால் நாயகரவர் களொதுக்கினர். அந்தச் சொல்லுக்கு அபார்த்தங்கொண்டு தம்மைநாயகர் பெருங் குறைவு செய்து விட்டதாக அவர் பேரில் வழக்குத் தொடுத்தனர் அந்த வைணவர். வழக்கிட்ட எதிரியோடு திர் வழக்கிட்டுக் காலம் போக்குவது ஸாதுக்களுக்கு மரபன் றெனவும், அது

சைவ

பரிபாலனமாகாதெனவுந் துணிந்து எதிரியை யொருசிறு தொகை கொடுத்துச் சமாதானஞ் செய்து கொண்டனர் நாயகர். அத்தோடே யெதிரிக்கு அக்குறைவு நீங்கிவிட்டது. அச்சிறுதொகை பெற்றுச் சென்ற வைணவர் இவ்வுலகை வெறுத்து ஒருமாதங்கூட இங்கிருக்கச் சம்மதியன்றி உடனே மேல்நாட்டுக்குச் சென்றனர். றனர். இதனால், நாயகரவர்கள் பாலுண்டாய குறைவுயாது? திருவண்ணாமலை விஷ்ணு க்ஷேத்திரமாகாதென நாட்டிய ஜயஸ்தம்பம் சிறிதேனும் ஆட்டங்கொடுக்கின், எதிரிகள் நாயகரவர்களைக் குறை கூறலாம். அத்திருமலை எப்படிப் பாதலத்தின் கீழுமூடுருவி விஷ்ணுமூர்த்தியால் தோண்டி முடியாமல் அதீதமாய் நின்றதோ, அப்படியே (திருவண்ணாமலை விஷ்ணுக்ஷேத்திர மாகாதென) நாயகரவர்கள் நாட்டிய சித்தாந்தமும் வேரூன்றிப் பொலிவெய்தியதுணர்க. நாயகரவர்களோடு வழக்கிட்ட எதிரியாவது, அவரினத்தவராவது அத்திருமலை விஷ்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/74&oldid=1590115" இலிருந்து மீள்விக்கப்பட்டது