உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 26

க்ஷேத்திரந்தான் என்று கருதி மூலங்காட்டி யுக்தியநுபவங் களோடு சாதித்ததுண்டாயின் பூர்வபட்சிகள் சந்தோஷிக்கலாம். அஃதொன்றுமின்றி மனஸ்தாபமான வார்த்தைகளைப் பெருக்கி எதிரிகள் சந்தோஷிப்பது ஒரு சந்தோஷமா? இதுவரை யாம் கூறியது வைஷ்ணவர்களைப் பற்றியது. இவர்கள் கதையை நமது மாயாவாத நண்பர் தூக்கிக் கொண்டு வெளி வந்தது பேராச்சரியமாம். வைஷ்ணவ சித்தாந்தம் தலை குனியப் பெற்றது போல நமதன்பரது மாயாவாதமும் எமது நாயகர வர்களால் நிலைகுலைந்த பரிபவமேலீட்டால் இந்து நண்பர் சிந்து பாடினார் போலும். இதனைத் தினகரனென்பார் காய்ந்து மாய்ந்திடச் செய்த பகுதி அபரிமிதம். அதனை நிறுத்தி, அவரெழுதிய ஏனைய சாஸ்திர விஷயங்களை மாத்திரம் ஈண்டெழுதிக் காட்டுகிறோம்.

வேதாந்தம்-அத்துவிதம் என்று இவர் கொண்டாடும் அவல மார்க்கத்தை மாயாவாதம் என்று எல்லாச் சமயிகளுங் கூறுகின்றனர். ஒருவன் தன்னை யுயர்வொப்பில்லாதவ னென்று கூறிக் கொள்வது ஸஹஜம். அது மணம் பெறுமா? பிறர் தன்னைப் புகழ்வதே பெருமை. பிறரெல்லா மிழித்துக்கூறிக் கொண்டிருக்கவும், தான் தன்காலைக் கும்பிட்டுக் கொள்வா னொத்து நமது இந்து நண்பர் தன்னை அளவுக்கதிகமாகக் கூறிக் காள்வதைப் பார்த்துப் பெருஞ் சிரிப்படைந்த தினகரனார் பின்வருமாறு பிரகாசப் படுத்துகிறார்.

தினகரனாரது பரிசோதனை

மாயாவாதம்

தம் மதத்தை மாயாவாதம் என்றால் நண்பருக்கு வெகு எரிச்சலுண்டாகிறதுபோற் காணுகின்றது. அது இயல்பு தான். ஆயினும் என்செய்வது? அதற்குரிய கொள்கை அம் மதத்தில் நிலவுவதால் உலகம் அதற்கு அப்பெயரிடுகின்றது. சைவ ரொருவர் மாத்திர மல்லவே. இந்து மதப் பிரிவின ரெல்ல வருமே மே நெடுங்காலந் தொட்டு அதை அப்பெயரிட்டழைக் கின்றார்கள். அப் பெயரும் பரம்பராசாரமாய் வழங்கப் பட்டு நிலைத்து விட்டது. அதனை அவர்கள் முன்னோர் யாரும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/75&oldid=1590116" இலிருந்து மீள்விக்கப்பட்டது