உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

43

சங்கித்ததாகப் புலப்படவில்லை. அப்பெயரை மறுப்பதற்கு கற்ற விவேகிகள் மதிக்கத்தக்க நியாயமில்லா மையாலோ, மற்றெதனாலோ அவர்கள் மறுக்காராயினர். நண்பருக்கோ கற்றோர் கவனிப்பரே என்னுங் என்னுங் கவலையில்லை போற் காண்கின்றது. ஆதலினாலே தான் ஏதேதோ நியாயங்களை யெல்லாஞ் சொல்ல “நீங்கள் தான் மாயா வாதிகள்” என்று (சொன்னவர்களையே) திருப்பிச் சொல்லத் துணிந்தனர். இவ்வாறே வேறு சில விஷயங்களிலும் சொன்னவர்களையே அவர் திருப்பிச் சொல்லும் விந்தை சிரிப்பை விளைக்கின்றது. ஈசுவரன்மித்தை-ஜீவன் மித்தை யென்பனவாதி கருத்து அவர் மதத்தில் வருவது கொண்டு அதை நாஸ்திகத்திற் குவமித் துரைத்தால், நீங்கள் தான் நாஸ்திகர் என்பார். வேதம் பொய் இல் பொருள்); வேதத்தில் வந்த கருமதருமங்களும் பொய், உலகமும் பொய்; யென்னுங் கருத்துக்கள் வருவது கொண்டு அவர் மதத்தை வேத பாகியம் என்றால், நீங்கள் தான் வேதபாகியர் என்பார். அவர் மதக் கொள்கை ஒரு வழியில் பௌத்தத்திற்கினப் பட்டிருத்தல் நோக்கி அதைப் பிரச்சன்ன பளத்தம் என்றால் நீங்கள் தான் பிரச்சன்ன பௌத்த ரன்பார். மாயாவாத நூற்களை மோகன சாஸ்திரம் என்றால், சிவாகமங்கள் தான் மோகனசாஸ்திர மென்று அரிய சிவபுண்ணியந் தேடிக் கொள்வார். இப்படித் தம்மதத் திற்கிடும் பெயரை யெல்லாந் திருப்பிச் சொன்னவர்களுக்கே சொல்லுகின்றர். இது யாருக்குத் தான் சிரிப்பை விளைக்காது? நண்பர் தமது பருவத்தைப் பாலப்பருவ மென்று நினைத்து அப்படிக்கெல்லாம் பேசுகின்ற னரோ யாதோ தெரியவில்லை. பிள்ளைகள்தான் அங்ஙனம் திருப்பிச் சொல்லி வாதாடக் காண்கின்றோம். இவர் பேசுவது விந்தையே. சைவரும் ஏனை இந்துமதப் பிரிவினரும் (எல்லா மதஸ்தரும்) இவர் மதத்தை மாயாவாத முதலிய பெயர்களிடட் டழைக்கின்றார்கள். இம் மாயாவாதிகள் நிரீச்சுவரவாதிகள், பிரசன்ன பௌத்தர்கள் என்று முடிவதால் இவர்கள் ஆஸ்தி கராகா ரென்க. இவர் மதப்படி ஜீவனில்லை ஈசுவரனில்லை ஜகத்தில்லை. இவை யாவும் காலத்தியத்துமில்லாத இல் பொருள்களாயிருந்தும், கள்ளத்தனமாயிருப்பது போற் காட்டிக்

L

.

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/76&oldid=1590117" இலிருந்து மீள்விக்கப்பட்டது