உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 26

கொண்டு, உள்ளே ஒரேவஸ்துவாகிய பிரமத்தை எப்படியோ இன்னபடி யென்றறியவும், உரைக்கவு முடியாத அநிர்வசனீய வழியில் மயக்கி, மனிதன்-நாய்-நரி-பூனை-புழுவாதி ஜன்ம சம்சாரப் பிரதிபந்தத்தில் விட்டு, ஆட்டிப் புடைத்து இப்போது பழைபடிப் பிரமமாக வேண்டிய பெரிய தொல்லையில் கொண்டுவந்து விட்டு வேடிக்கை பார்க்கும் அதிசயம் வேகிகளுக்குச் சிரிப்பை விளைக்காமற் போகுமா? இதுதானா ஆஸ்திகம்? பளா! நன்று! நன்று! இம்மதத்தைத் தான் உள் பொருளாக வேதங்களெல்லா மெடுத்து முழக்கு மென்று நண்பர் சொல்லிச் சந்தோஷிக்கிறார். அவரை அச்சந்தோஷத் திலழுத்திவிட்டு, வீண்காலம் போக்காமல் வேறுபகுதிகளைப் பரிசோதிக்கச் செல்வாம்.

சைவர்கள் “நியாயங் காட்டாமல் ஏகான்மவாதிகளை மாயாவாதிகள் என்று பொறாமையினாற் சொன்னால், அது ஒப்பந்தக்கதல்ல" என்னும் யுக்தியொன்று காட்டி மாயாவாத மகுடத்தை நண்பர் கழற்றியெறியப் பார்த்தார். அவ்வள வெளிதில் அம்மகுடங் கழலுவதாயிருந்தால், இது வரையிலும் அவர்மதத்தவரில் யாராவது அதைக் கழற்ற முயன்றி ருப்பார்களே. ஏன் முயலவில்லை? அவர்கள் தம் மதவூன முணர்ந்தவர்கள். அன்றியும், கற்றோரவைக் கண்ணே கண்ட யுக்திகளைச் சொல்லி வீண்வாதஞ் செய்வதில் அச்சமுடைய வர்கள். இல்லையாயின், நண்பருக்குத் தெரிந்த இந்தக் குயுக்தி அவர்களுக்குத் தெரியாதிருக்குமா? மேலும் ஏதோநியாய மில்லாமல் உலகில் எதுவுஞ் சொல்லப்பட மாட்டாதே. மாயாவாதபதம் பூர்வப் பெரியோர்களது செய்யுட்களில் வந்திருக்கின்றது. அப்பதப் பிரயோகத்திற்கு நியாயம் அதில் தொகையாயிருக்கும், நாயகரவர்கள் அதை விரித்துக் கூறியிருக் கின்றனர். பிரபஞ்சத்தினுபாதான காரணம் பிரமம் என்பது மாயாவாத நூற்களின் ஓர் துணிபு. அவர்கள் நூற்களே அங்ஙனந் துணிந்தமையால் அதன்மேல் அவர்கள் நூறு நியாயங்கள் சொல்லிக் கொண்ட போதிலும் ஜடவுலகுக் குபா தானமாகிய அவர்களது பிரமம் சித்தாந்த சாத்திரக் கொள்கை யின்படி மாயையினிடத்தில் நிற்பதால், பொய் மாத்திரத்தானே அவர்கள் மதநிலை யின்னதென்று எளிதிற்றோன்றவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/77&oldid=1590118" இலிருந்து மீள்விக்கப்பட்டது