உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

45

அதனை யுணர்ந்து உலகம் மயக்க கற்றியுய்யவும் வேண்டிப் பூர்வ காலத்துப் பெரியோர்கள் அம்மதத்திற்கு மாயாவாதம் என்று நாமஞ்சாற்றி யுபகரித் ததாக நாயகரவர்கள் பிரகாசப் படுத்தினர். உண்மை யிங்ஙன மாயின், இதில் ஏன் ஒருவருக்கு வாதமாவது, வருத்தமாவது நிகழ வேண்டுமா தெரியவில்லை. பிரமம் ஜடப் பிரபஞ் சத்திற்கு உபாதானமென்று அவர்கள் மதநூல் நாட்டா விடில், விடில், சித்தாந்தப் பெரியோர்கள் அம்மதத்திற்கு மாயா வாதம் என்று பேரிடவுடன்படார்கள். இவ்வுண்மை யியல்புகளை யுணருஞ் சக்தியின்றித் தங்களை மாயாவாதிகள் என்றழைப் பதைச் சகியாது சகியாது அங்ஙன மழைப்பவரையே திருப்பி நீங்கள் தான் மாயாவாதிகள் என்று வீண்வாது பேசினால் அது கற்றோர் மதிப்பி லெங்ஙனங் கனம் பெறும்? சைவர்களெங்ஙனோ மாயாவாதிகளாவார்கள்? நண்பரே அதை அந்தரங்கத்தில் நம்புகின்றனரா? மாயோபாதான மொன்றுண்டென்று கொள்வதனாலேயே சைவர்கள் மாயாவாதிகளாவதற்கு எந்த நியாய சாஸ்திரம் இடந்தரும்? மாயையேயன்றிப் பிரமமும், ஆன்மாக்களும், ஜகத்தும் அவர்கள் உள் பொருள்க யென்கின்றார்களே. நண்பரது (கற்றுத்தேர்ந்த) யுக்தியின்படி அவ்வொவ்வொரு பொருள்கள் வழியிலும் அவர்களுக்குப் பெயர்கள் வரல்வேண்டு மன்றோ? இது என்ன ஆபாசம்? இனி, கற்றோர்முன் சைவர்களுக்கு அப்பெயர்களையெல்லாமிட்டு, வேண்டிய பரிசு பெற்று நண்பர் சந்தோஷிக்கட்டும். இது நிற்க. சைவர்கள் மாயாவாதிகளாதற்கு அவர்கள் பிரமமாக் கொண் பரம் பொருள், நண்பர் மதக் கொள்கைபோல் மாயை ஸ்தானத்திற் சென்று முடிந்தகாலமன்றோ நியாய முண்டாம்? ஜடப்பிரபஞ்சத்திற்கு ஜடமாகிய மாயை யுபாதான காரண மென்றும், அம்மாயைக்கு வேறான சைதன்யமாயுள்ள பரம் பொருளால் காரணரூபமாயோ பாதனத்திருந்து ஜடவுலகங் காரியப்படு மென்றும் சித்தாந்த சாஸ்திரங்களறுதி யிட்ட பித்தியக்ஷமுதலிய பிரமாணங் களுக்கிசைந்து, விபரீத முரண் பாடுகளுக் கிடந்தராமல் ஏதுவையும் பயனையும் இசைவுறக் காட்டி நிர்விவாதமாய் நிகரற்று ஜொலிக்கும் இவ்வரிய கொள்கையை யுடைய சைவர்களைப் பார்த்து நீங்கள் தான்

ன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/78&oldid=1590119" இலிருந்து மீள்விக்கப்பட்டது