உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • மறைமலையம் - 26

மாயாவாதிகள் என்று திருப்பிச் சொன்னால், யார்தான் சிரிக்க மாட்டார்கள்? நாயகரவர்கள் இப்பகுதிகளை யெல்லாம் முன்னரே நன்கு பரிஷ்கரித்திருப்பதா லிவ்வளவில் நிறுத்தி னோம். நிற்க.

பொறாமை

பூர்வகாலத்துச் சைவப் பெரியோர் பொறாமையினால் ஏகான்மவாதத்தை மாயாவாதம் என்றதாக நண்பர் துக்கித் தாரன்றோ? மாயாவாதத்தில் நண்பருக்குள்ள அழுத்தம் வியக்கத்தக்கதே. ஆயினும் அந்தங்கெட வொன்றை விளம்பு வதும், விவகரிப்பதும் அழகு செய்யாவே. மாயாவாதக் காள்கையில், சைவருள் மகான்களாயிருந்தவர்களுக்குங் கூடப் பொறாமை வரத்தக்க புதுமை யாதுளது? ஐந்து வருஷகாலமாக இவ்வாதம் நிகழ்கிற தென்று நண்பரே மொழிகின்றனர். இந்நீண்டகால வாதத்தில் மாயாவாதிகளாவார் என்ன சாதித்தார்கள்? இதுகாறும் அவர்கள் காட்டிவந்த புதுமை களெல்லாம் சைவசித்தாந்த சண்ட மாருதத்தின் முன்பு பஞ்சாய்ப் பறக்கக் கண்டோம். அவர் களது மதப்புதுமை களெல்லாம் பிரமத்திற்குப் பிராந்தி தோஷம்-அவித்தியாப் பிரதிபந்த தோஷம் (தற்கால விவகாரத்தின்படி) வேதத்தாலும் இன்னபடி யென்றறிந்து சொல்ல முடியாத அநிர்வசனீய ஜகத்தோற்ற தோஷமாகி அநுசித யுத்திகளிற்றானே முடிந்திருக் கின்றன? இதில் யாருக்குப் பொறாமை? சாதாரணருக்கே வராதெனில், சர்வைசுவரியஸம்பந்நர்களாய், சிவஞானச் செல்வர்களாயிருந்த மேலோருக்கு அது வந்ததென்று இந்து என்பவர் கூசாமற் கூறவந்தது அவர் புண்ணியக் குறைவென்றே துக்கிக்கின்றோம். இனி அதனுண்மைப் பெயரை உலகமுணர்ந் துய்ய வேண்டுமென்று விளம்பினாரென்பதே பொருத்த முடையதென்க. நிற்க

பூரணம்

சி

இந்து என்பவருக்குச் சைவர் கொள்கையிற்றோன்றுஞ் சகலவாக்ஷேபங்கட்கும், மாயாவாதமத முரண்களில் அவருக்குண்டாகுஞ் சகல வுடன்பாடுகளுக்கும் இப்பூரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/79&oldid=1590120" இலிருந்து மீள்விக்கப்பட்டது