உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொ

வேதாந்த மதவிசாரம்

47

லக்ஷணமொன்றே காரணமெனக் காணப்படுகின்றது. பதிப் பாருளோடு பசு பாசங்களை யுள்பொருள்களாகக் கொள்ளுங் கொள்கையில் நண்பருக்குண்டாகுங் கஷ்டங் காஞ்சமல்ல. காலத்திரயத்துமில்லாத இல் பொருள் களாகிய பிரத்யக்ஷ ஜீவேசுவர ஜகங்கள் சொன்னபடி யென்று சொல்ல முடியாத படி சும்மாத் தோற்றிக்கொண்டிருக்கும் என்னுங் கொள்கையில் மாத்திரம் அவருக்குக் கஷ்டங் கொஞ்சமுந் தோன்றாது ஒருவஸ்துவுள்ளவிடத்தில் மற்றோர் வஸ்து விருக்கமுடியா தென்றும், இருந்தால் பூரணங் கெடுமென்றும் நியாயம் பேசித் தமது சாமர்த்தியந் தோன்ற "நாற்கோணத்தில் முக்கோண மிருக்குமா?" என்று கடாவித் தர்க்கித்தனர். நாற்கோணத்திற் முக்கோணம் அடங்கியிருக்குமுண்மையை நாயகரவர்கள் சிறிய வோரதிசய யுக்தியால் நன்கு விளக்கி னார்கள். மூலைக்கு மூலை கோடிழுக்கின் நாற்கோணத்தில் முக்கோண மடங்கி யிருக்கு மழகு வெளிப்படு மென்பதே அந்த யுக்தியாம். இவ்வதிசய யுக்தியைக் கேட்ட பின்னர் இவர் குணப்பட்டாரா? ஏதேதோ கேள்விகளைக் கேட்டுத் தர்க்கம் விட்டுக்

பண்ணிக்

காண்டு வீண் பிடிவாதங்களை ள

6

குணப்படாத வர்களுக்கு எத்தனை யுக்தி நியாயங்கள் சொன்னலும் பயனென்னை? அவர்கேட்ட கேள்வியிலேயே நாற்கோணத்தில் (பூரணங் கெடாமல்) முக்கோணங்களடங்கி யிருக்கு முண்மை யியல்பைக் கண்ட பிறகு சத்தியத்தை விரும்பினவராயிருந்தால் நண்பர் உடனே மனந்திரும்பிக் குணப்பட வேண்டியது அவர் கடனன்றோ? நண்பர் கேட்ட கேள்வியும், அதற்கு வந்த அதிசயவிடையும் நண்பருக்குப் பயன்படா தொழியினும், மெய்யன்பர்களுக்கு மெய்ம்மையை யுணர்த்தி, அதில் அவர் களது மனம் திண்மை யெய்தப் பண்ணினதால் அன்பர் களுக்கே அவை பயன் பட்டன வென்க. தண்கமலத்தூற்றுந் தேனைச் கொள்ளை கொண்டுண்பது தூரத்திலிருந்து வரும் பண்ணளி களே யாமன்றோ? இவர் அதிசூஷ்ம பரமசிவத்தின் பூரண லக்ஷண விசாரத்தில் கேவலம் ஸ்தூலவஸ்து நியாயங் களைக் கலந்து வாதிக்கில் உண்மை தோன்றுமாறெங்ஙனம்? ஸ்தூலம் பாயாதவிடங்களில் சூஷ்மம் பாயுமியல்பொன்றைச் சிந்திக்கில் விருதாவான வாசங்கைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/80&oldid=1590121" இலிருந்து மீள்விக்கப்பட்டது