உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

.

மறைமலையம் - 26

-

கிடஞ்செய்யாதென்க. அதி சூக்கும பரமசிவமானது சர்வ தத்துவங்களிலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாயிருக்கவல்ல தன்மையை “ & o K Sopg" என்னும் மஹாமந்திரம் நன்கு விளக்குகின்றது. இவ்வுண்மை யியல் பினை நம் சிற்றறிவுக்கொருவாறு விளக்குதற் பொருட்டே கதிரொளி ஆகாயம் - எள்ளிலெண்ணெய் முதலிய நமதநுபவ வஸ்துக் களை யுவமைகூறிச் சாத்திரங்க ளுபகரித்தன. ஆன்றோரும் அவ்வுவமைகளை யெடுத்தாண்டர். அவற்றின் மேல் விபரீத சங்கைகள் செய்து நண்பர் உண்மையை யுதைத்துத் தள்ளினர். கண்ணொளியில் கதிரொளி கலந்தது போலென்னும் உவமையில், கண்ணுக்கொளி யில்லை யென்று வீண்வாதஞ் செய்தனர். இவருக்குக் கண்ணொளி யின்றெனில் உலகுக்கு மஃதில்லையாமோ? கண்ணொளி யற்றவர்களுக்கு எதிலும் உண்மைநிலைதோன்றுவது கஷ்டங் கஷ்டமே! கண்ணொளி யில்லையென்ற நண்பர் வாதத்தைச் சித்தாந்தச் செல்வர்கள் முன்னரே சிதைத்தொழித்தார்கள். ஆகாயமானது ஏனைப் பூதபௌதிகங்களி னுள்ளும் புறம்பும் நிறைந்து பூரணமாய் நிற்றல் போலென்னு முவமையில், ஆகாயமே ஏனையபூத பௌதிசங்களாய்த் திரிந்து அல்லது, திரிந்ததுபோற் காட்டிக் காண்டிருக்குமன்றி ஆகாயம் வேறு, ஏனைப்பூத பௌதி கங்கள் வேறு என்பது பிசகென்று கண்ணொளியற்ற நியாயஞ் சொல்லி, பஞ்சுத் திட்டாந்த மொன்று காட்டி இந்துவென்பவ்ர் வாதித்தனர். இவர் காட்டிய பஞ்சத் திட்டாந்தப் பொதிக்கு நாயகரவர்கள் வைத்த நெருப்புப் பொறியைப் பின்னர் வெளியிடுவோம். இனி எள்ளில் எண்ணெயானது உள்ளும் புறம்பும் நிறைந்து நிற்றல்போல வென்னுமுவமையில் எள் என்பது திப்பியும் நெய்யுங் கலந்த வஸ்துவென்றும், எள்ளையாட்டிப் பிழிந்தால் திப்பிவேறு நெய்வேறாகு மென்றும், இவ்விருபொருள்களும் பூரணங் கெடாமற் சேர்ந்திருக்க முடியாதென்றும் வீணாசங்கைகள் செய்து தர்க்கித்தனர். திப்பியும் நெய்யுங் கலந்த நிலையிற்றானே எள்ளென்று சொல்லப்படும். அந் நிலையிற்றா னிங்குவ மானம், எள்ளை யாட்டிப் பிழிந்து விபரீதப்படுத்தச் சொன்னவர் யாவர்? எள்ளிலுள்ள எண்ணெய் அதனுள்ளும் புறம்பும் நிறைந்து பரிபூரணமாய் நிற்கும். எள்ளைப் பூதக் கண்ணாடிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/81&oldid=1590122" இலிருந்து மீள்விக்கப்பட்டது