உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

49

மகப் படாத அதிநுணுக்கவணுக்களாகச் செய்து பார்த்தாலும் அவ்வணுக்களுள்ளும் பரமாணுவாக எண்ணெய் நிறைந்து நிற்குமுண்மை யாவரு மறியக்கிடக்கும். இதனால் எண்ணெயி னது சூக்ஷ்ம வியாபகம் இனைத்தென விளங்கும். எண்ணெயி னது இந்நிறைவையே பரமசிவத்தின் வியாபக லக்ஷணத்திற்கு திதொட்டுச் சாத்திரங்களிலும், ஆன்றோராட்சிகளிலும் உவமையாக வெடுத்தாண்டு வருவது சித்தம். இதிலின்று நண்பர் வீண்வாதஞ் சய்ய வந்ததென்னோ? எள்ளிலெண்ணெ யென்பதிலும், ஏனை யுவமானங்களிலும் இன்று குற்றங் காண வந்த நண்பருக்கு, "ஆகாயமானது எப்படி யேனைய பூத பௌதிகங்களாய்த் திரிந்தது போற் காட்டிக் காண்டிருக்கு மோ அப்படியே பிரமமும் பிரபஞ்சமாய்த் திரிந்தது போற் காட்டிக் கொண்டிருக்கும்” என்னுங் கண்ணொளியற்ற கொள்கை யிலும், “சத்துமாகாமல் அசத்து மாகாமல் (இன்னபடி யென்றறிந்து சொல்ல முடியாத) அநிர்வசநீயமாய் மாயாப் பிரபஞ்சங்கள் தோற்றிக் கொண்டு பிரமங்களாகிய நம்மை யேமாற்றிக் கொண்டிருக்குமென்னும் பயித்தியக்காரக் கொள்கையிலும் ஆசங்கை நிகழாதது அதிசயம்! அதிசயமே!! நிற்க.

பிரதிபலந வாதம்

நாமரூபமற்ற பிரமம் மாயா வித்தைகளிற் பிரதி பலிக்குமென்பது மாயாவாத நூற்களின் முக்கியக் கருத்து. இதை நாயகரவர்க ளாசங்கித்து உருவமற்ற பிரமத்தினிடத்தில் பிரதிபலந நியாயஞ் செல்லாதென்றும், அதவா செல்லுமென் றொப்பினாலும் இரண்டாம் வஸ்துவில்லா விடத்துப் பிரதி பலநம் உண்டாகாதென்றும், இரண்டாவது வஸ்துவை யொப்புங்கால் அத்வைதபதத்திற்கு "பிரமத்தைத் தவிர இரண்டாம் ரம் வஸ்துவில்லை" என்று கூறும் மாயா வாதி களுடைய அத்வைதம் அனர்த்தமாய்ப் போமென்றுங் காட்டிப் பிரதிபலந வாதத்தைக் கண்டித்தனர். அதன் மேல் "உருவமற்ற சிவம் பலவுரு வெடுத்ததென்றது மாத்திரமாகும், உருவமற்ற பிரமம் பிரதிபலித்தது என்றதுமாத்திரங் கூடாதாம்" என்று நண்பர் வழக்காடினர். சிவம் பலவுரு வெடுக்கு மென்பதற்காக

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/82&oldid=1590123" இலிருந்து மீள்விக்கப்பட்டது