உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் - 26

நண்பர் தமது பிரமத்திற்கும் அவ்வியல்பைச் சொந்தப் படுத்த வந்தனர். அவ்வியல்புக்கு இன்றியமையாத ஏனைக் கொள்கை களையும், இலக்கணங் களையு மங்கீகரித்தாலன்றோ அது பொருந்தும்? முன்னொடு பின் முரணும் அவாந்தரக் கொள்கை களை அவலம்பித்துக் கொண்டு பிரமம் பலவுருத்தாங்கு மியல்புக்கு ஆசைப் பட்டால் அது பொருந்துமோ? நண்பர் விஷயந் தெரிந்து வியவரிக்கிறதாகப் புலப்படவில்லை. இனி நாயகரவர்கள் சொல்லும் பிரமம் அல்லாது சிவத்தினுடைய லக்ஷணமும், நண்பர் கூறும் பிரமத்தினுடைய லக்ஷணமும் ஒன்றாகுமா? நாயகரவர்கள் சொல்லும் பிரமம் அருவம்- உருவம்-அருவுருவம்-அதீதம் என்னும் லக்ஷணமுடையது. ஆன்மாக்களது அநுக்கிரகார்த்தமாக அது அவ்வியல்புகளைத் தாங்கியருளி அநுக்கிரக வியல்புக்கேற்ப அவனவளதுவா யாவிர்ப்பவித்து வெளிவரு மியல்பினதென்று வேதாக மங்கள் துதியா நிற்கும். பரம அங்ஙனம் வெளிவருவதும் அருட் சத்தியைத் திருமேனியாகக் கொண்டாம். இங்ஙனமாக, “அதிலும் பன்றியுரு வெடுக்குமா?” என்று நண்பர் பரிகாச வழியில் இழிவுறவினாயது வேதபாகியருக்கன்றி வைதிகருக் கடாதே. நிற்க, நாயகரவர்கள் சொல்லும் சிவம் அல்லது பிரமம் பலவுருவா யாவிர்ப்ப வித்தலில், மேலே காட்டிய நியாயங்களால் விரோதம் யாதும் வருமாறில்லை. நண்பர் சொல்லும் பிரமமோ உருவமற்ற வியல்பொன்றே யுடையது. தனக்கன்னியமா யிரண் டாம் பதார்த்தத்தி னிருப்பை ஏற்காதது. ஏற்காதாகவே நிக்ரகா நுக்ரச வியல்பற்றது. அப்படிப்பட்ட பிரமம் மற்றொன்றிற் பிரதிபலித்தது என்றால், யார் குடியை வாழவைக்க அது அங்ஙனம் பிரதிபலித்தது என்று உலகஞ் சங்கை செய்யாது விடுமா? உள்பொருள்களாகாத மாயா வித்தைகளில் அது எங்ஙனம் பிரதிபலிக்கும் என்றும் உலகங் கேட்காது விடுமா? ஆகவே மாயாவாதிகளது பிரிதிபலந வாதம் சுத்த வீண்வாத மென்றே தள்ளத்தக்க தாயிற்றென்க. நிற்க.

ஆலாலசுந்தர விக்ரகம்

இவ்வரிய திவ்யமங்களவிக்கிரகத்தையும் நண்பர் தமது வீண்விவகாரத்தி லிழுத்து விட்டனர். “பிரமத்தின் பிரதி பிம்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/83&oldid=1590124" இலிருந்து மீள்விக்கப்பட்டது