உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

L

51

வனெனச் சுருதியாதிகள் சொல்லியும் அதை யொத்துக் காள்ளாமல் அவைதிகராய் நின்று வேத விரோதமா யாக்ஷேபிப்பவர், பரமசிவனுடைய பிரதிபிம்பம் சுந்தர மூர்த்தி சுவாமிகளென அங்கீகரிப்ப தெங்ஙனமோ வறியோம்” என்று தாக்கினர். ஸ்ரீபரமசிவத்தின் பிரதிபிம்பம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று நண்பர் சொன்னது பழுது.ஸ்ரீ ஆலாலசுந்தர மங்கள விக்கிரகமே அதுவாம். ஸ்ரீசுந்தர மூர்த்திகள் திருக் கோலம் மானிடவுருத்தாங்கிய அவசரத்தது. இது நிற்க. பிரமம் ஜீவனாகப் பிரதிபலித் துழன்று வருந்தும் என்று சுருதியாதிகள் சொல்வதாகச் சொல்லித் தம்மை வைதிகராக்கிக் கொண்டு, பிரமம் ஜீவனாகப் பிரதிபலித்தாவது பரிணமித்தாவது உழன்று வருந்தாது என்ற நாயக ரவர்களை அவைதிகரெனத் தூற்றிய போது நண்பருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்திராமற் போகாது. வ்விருவாதிகள் கொள்கைகளிலும் சுருதியினிதயமிசைந்த காள்கை இன்ன தாமென்று சிறுபிள்ளைகளு முணரக் கிடக்குமாதலால் நண்பருக்கு அது தோன்றாமலிராதே. ஆன்மாக்களடையும் எழுபிறவிகளுள். உயர்பிறவியாகிய தேவர் களிற் சிலரைச் சுருதியாதிகள் பிரமம் என்றழைத்தனவன்றோ? அதை யெக் கருத்தில் நண்பர் கொண்டனர்? வேதம் பல் பக்குவமோர்ந்து பூர்வபக்ஷசித்தாந்தங்களாகச் சொல்லுங் கருத்துகளைக் கலவைக் கீரையாய்க் கலந்து விவகரிப்பது விசாரத் தெளி வாகாமையுந் தவிர உண்மையுந் தோன்றா தொளிக்கும். சுருதியில் நண்பர் சொல்லுவது போன்ற வாக்கியங் களிருப்ப துண்மையெனில், அவை பூர்வபக்ஷக் கருத்தில் வந்தனவாம். எந்தச் சுருதியாவது தனது கெளரவத்தை மறந்து பரப் பிரமத்திற்கு ஜீவனாய் வரும் இழிவையும், ஜநந மரண சம்சா மடைந்து அது வருந்தும் அசங்கதத்தையும், அநிர்வசனீ யமாய்ப் பிரபஞ்சத் தோற்ற மயக்கமுளைத்த வநுசிதத்தையுங் கூறி யிழிவுறுமோ? சுருதிகளில் பூர்வபக்ஷ வாக்கியங்களைக் கொள்ளும் நண்பரினத்தவர் வைதிகரா வரெனின், அவ்வரிய சுருதிகளின் சித்தாந்த வாக்கியங்களைக் கைக்கொண் டொழு கும் எங்கள் நாயகரவர்கள் அவைதிகரா வரென்றது எந்த நியாயத்தாலோ தெரியவில்லையே. இவ்விந்தையான நியாயம் யாருக்குத்தான் சிரிப்பை விளைவிக்க மாட்டாது? இனி யுண்மை யாதெனில், சுருதியாதிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/84&oldid=1590125" இலிருந்து மீள்விக்கப்பட்டது