உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 26

கைக்

சித்தாந்த வாக்கியங்களையுங் கருத்துகளையுங் கொள்வோர் நிஜமான வைதிகரும், பூர்வபக்ஷ வாக்கியங் களையுங் கருத்துகளையுங் கைக்கொண் டொழுகுவோர் போலிவை கதிகருமாவ ரென்பதே சித்தமாம்.

இனி, சிவம்-அல்லது பிரமம் நிஷ்களசகள லக்ஷணங் களுடைய தென்பது வேதசிவாகங்களின் றுணிவு. சகளம் ஆன்மாக்களின் அநுக்கிரகார்த்தம் வெளிப்படும் பரமோ பகார திவ்யமங்களவடிவமாம். அது சகளமாய் வராதாயின் ஆன்மாக் களுக்கு உய்தியில்லையாய் விடும். இச்சகள வடிவம் ஒன்றிற் பிரதிபலித்தல் சாலும். இவ்வடிவத்திற் கன்னியமான கண்ணாடி

முதலிய அன்னிய வஸ்துக்களினிருப்புஞ் சாலும்.

கண்ணாடியில் எல்லாம் வல்ல பரனது சகளத்திருவுருவம் பிரதிபலித்த லுஞ்சாலும். அங்ஙனம் பிரதிபலித்ததும், அப்பிரதி பலநம் உருவமாய் வெளிவந்ததும் ஆகிய எல்லாமும் அநுக்கிர கார்த்தமேயாம். இதில், நியாய விரோதமாவது உண்மை விரோதமாவது நிகழ விடவில்லை. நண்பர் சொல்லும் பிரமமோ, உருவமற்ற ஒரே லக்ஷண முடையது. தனக்கன்னியமா யிரண்டாம் பதார்த்தத்தைக் காலத்திரயத்தும் ஏற்காதது. அப்படிப்பட்ட பிரமம் பிரதி பலிக்குமென்பதும், அங்ஙனம் பிரதிபலித்தலைச் சுருதி யாதிகள் சொல்லுமென்பதும், அக் கொள்கைகளை யவலம் பிப்பவர்களே வைதிகரென்பதும் ஆகியவிவையாவும் பரிகாசமாகாது மற்றென்னாம்? பிரமம் பலஜீவராய்ப் பிரதி பலித்துழன்று வருந்துவது என்ன காரியஞ் சாதித்தற்கோ? அல்லது யார் குடியை வாழவைக்கவோ? ஆலாலசுந்தர மங்கள விக்கிரகத்தை விவகாரத்தி லிழுத்ததனால் நண்பருக் கென்ன சாதகமாயிற்றோ தெரியவில்லை. இவ்வாறு வீண் சங்கதிகள் பலவற்றையெழுதிப் புத்தகங்களை நிரப்பி விட்டு, அவற்றிற்கெல்லாம் பதிலெழுதுவது சுத்த வீண்காலப் போக்காமென் றொதுக்கிய எம்மவர்மேல் (தாம் கேட்ட கேள்விகள் மலையளவென்றும், அவற்றிற்குப் பதில் சொல்லக் கையாலாகவில்லையென்றும்) பழியேற்றி மகிழ்ந்தது மதியா மோ? நண்பருக்குச் சத்தியத்தில் விருப்பும், உய்ந்து போவதில் ஆவலுமுண்டெனில் சத்தான கேள்விகளைக் கேட்டு, முடிவு ஏற்படும் வரையிலும் பொறுத்து மகிழ்வதே அழகாம். நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/85&oldid=1590126" இலிருந்து மீள்விக்கப்பட்டது