உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

81

உருவமும் தோன்றா திருந்தமையே மழுங்கிய நிலையென்றும், னி னி அஃது உலகத்துப் பொருள்களை அறிய அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருந்த வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும், அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு மிகுதியும் விளக்கமுடையதா மென்பதும் துகொண்டு அறியற் பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடைய தாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கின்றது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்குபட்ட உருவமுமடையதாய்த் திகழத் திகழ அதுவும் மிகச் சிறப்பெய்துமாறு உணரற்பாற்று.

ங்ஙனமாக அறிவில்லாப் பொருளும், அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்க மெய்துதலும் நமது வழக்கத்தில் மறுக்கப்படாத உண்மை யாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தா உரையாம்.அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன்மிக உடையன வாய் விளங்குமாயின் பேரறிவுப் பொருளாய் எல்லாம் வல்லதாய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவம் குற்றமுடைய ய தாகுமோ? நன்கு ஆராய்ந்து பார்மின்கள்! இனி அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் அறிவுள்ள உயிரோடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தனவாய் இருத்தல் போலவும் பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப் படும் உருவங்கள் மிக மிகச் சிறந்தனவாய் இருக்கு மென்பதையாம் உரைத்தலும் வேண்டுமோ?

அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாம் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/106&oldid=1591076" இலிருந்து மீள்விக்கப்பட்டது