உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

103

உடம்பை மட்டும் வளர்த்தற்கு உதவியாம் பருப்பொருட் சல்வம் போலாது உயிரின் அறிவாகிய உடம்பை வளர்த்தற்கு மிக இயைந்த பொருளாய் விளங்கும் சமய உணர்ச்சியானது நாகரிக மில்லாதார் முதல் நாகரிக க முடையார் ஈறான எத்திறத்தவர்க்கும் பொதுமை யின் நிகழக் காண்கின்றோம்.

இனி இந்தச் சமயம் என்னுஞ் சொல்லாற் பொழுது, அல்லது காலம் என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஐம்பொறி உணர்வுகளும் ஒரு காலத்து ஒருங்கு சேர்ந்து ஐம்புலன்களையும் ஒருங்கு நுகராமையால், அவ்வைம் பொறிகள் ஒவ்வொன்றன் வாயிலாய்த் தனித்தனியே சென்று அவ்வவற்றை அறிகின்ற உயிரானது அவ்வவற்றை அங்ஙனம் தனித்தனியே அறியும் பல பொழுதுகள் உடையவாகின்றது. வ்வாறு காலத்தினால் வரையறுக்கப்படுதல் ஓரிடத்தே மட்டும் அறிவு விளங்கும் உயிருக்கன்றி எங்கும் அறிவு விளங்கும் இறைவனுக்கு ல்லையாம். அசைவுடைய பொருள்களுக்கே காலமும் இடமும் உண்டாம். ஒரிடத்து மட்டும் நிற்குமியல்புடைய சாத்தான் என்பான் கங்கைக் கரையிலிருந்தான் என்ற வழி இறந்தகாலமும் காவிரிக் கரையி லிருக்கின்றான் என்னும் வழி நிகழ்காலமும், குமரித் துறையிலிருப்பான் என்புழி எதிர் காலமும் கங்கை, காவிரி, குமரி என்னும் இடங்களும் பெறப்படுகின்றன.

ம்

இங்ஙனங் கால வேறுபாடுகளும் இடவேறுபாடுகளும் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய உயிர்களுக்கே உள்ளன வாதல் தெற்றென விளங்கும். இனி அச்சாத்தன் என்பவன் அவ்வாறு சிற்றறிவும் சிறு தொழிலுமில்லாது எங்கும் உள்ள அறிவுப் பொருள் என்று நினைக்கக் கூடுமாயிற் கங்கை, காவிரி, குமரி முதலான எல்லாஇடங்களிலும் அசைவின்றி ஒரே காலத்துள்ள அவனுக்கு அங்ஙனங் கால வேறுபாடும் இடவேறுபாடும் ஒருவாற்றானும் சொல்லல் ஏலாதென்க. நேற்றும் இன்றும் நாளையும் கங்கை, காவிரி, குமரி என்னும் எல்லா இடங்களிலும் ஒருங்கு இருப்பானை நோக்கி இவன் கங்கைக்கரையிலிருந்தான், காவிரிக்கரையிலிருக் கின்றான், குமரித் துறையிலிருப்பான் என்று வழங்குவோ மாயின் அஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/128&oldid=1591098" இலிருந்து மீள்விக்கப்பட்டது