உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

6. இரு சைவ விளக்கங்கள்

சைவமென்பது யாது? அச்சைவத்தினை விளக்கிய இரண்டு விளக்கங்கள் யாவை? என்று ஆராயப்புகுகின்றமை யின் இதற்கு இத்தலைப்பெயர் புனைந்து வைக்கப்பட்டது. இந்த நிலவுலகத்திலே பிறந்து இருந்து இறந்துபோகின்ற உயிர் களுள்ளே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்ச்சிகள் மட்டும் வாய்ப்பப் பெற்று இவ்வைந்துணர்வு களினும் மேம்பட்டுஇவை தம்மை யெல்லாம் நல்ல திது தீயதிது என்று பகுத்தறியும் சிறப்பறிவு பொருந்தப் பெறாத விலங்கினங்களை யொழித்து மிக அரிதிலே கிடைத்த மக்கட் பிறவியினை யுடையவர்களுக்கெல்லாம்இப் பகுத்துணர்வால் இவ்வுலகத்திற் பெறப்படாத ஓரரும் பெரும் பொருள் கையகத்தே இருக்கக் காண்கின்றேம். இப்பருப்பொரு ளுலகத்திற் ப்பருப்பொருளுலகத்திற் பருப்பொருண் முயற்சியால் தொகுத்துக் கொள்ளப் படும் பருங் குவியலான பெரும் பொருளெல்லாம் இப் பருவுடம்பு இப் பருப்பொரு ளுலகத்தில் நடைபெறுங்காறும் ஒருசிலர்க்கு மட்டும் ஒவ்வொரு வகையாற் பயன்பட்டு அழிவெய்தி மறுமையிற் செல்லும் அறிவுருவான உயிர்க்குச் சிறிதும் பயன்படுவதின்றாய் ஒழியும். இது,

தெய்வச் சிதம்பர தேவாவுன் சித்தந் திரும்பிவிட்டாற்

பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங் கேமண்ட லீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடக சாலையெங் கேயிது கண்மயக்கே

என்று அகப்புறப் பற்று முற்றும் விட்ட பெருந்தவத் தோரான பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டான் இனிது விளங்கும். இத்தன்மையதான பருப்பொருட் செல்வம் போலாது, உயிரின் அறிவாகிய களஞ்சிய அறையிலே வைத்து பாதுகாக்கப்படுவதாய், அழியுந்தன்மைத்தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/127&oldid=1591097" இலிருந்து மீள்விக்கப்பட்டது