உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

101

தப்பிப்

இக்கொடுந் தீவினைக்கு நீங்கள் எப்படித் பிழைப்பீர்களோ அறியேன்! முன்னெல்லாம் அறியாமை யாற் செய்த பிழையை, அறிவு தெரிந்த இனிமேலாயினும் நினைந்து இரக்கமுற்று, நம்இறைவனாகிய தந்தையிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டு, இனி எந்த வுயிர்க்குந் தீங்கு செய்யாமல், எல்லா வுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் பூண்டு ஒழுகுதல் வேண்டும்.

கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே

என்னும் தாயுமான சுவாமிகள் திருமொழிப்படி, கொல்லா வொழுக்கத்தின் மேன்மையை நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் நன்றாக எடுத்துச் சொல்லி எல்லாரையும் அன்பும் இரக்கமும் உடையவர்களாகச் செய்து அதனால் கடவுட்டன்மையை நாம் அடைந்து நம் ஐயனுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/126&oldid=1591096" இலிருந்து மீள்விக்கப்பட்டது