உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

❖ ❖ மறைமலையம் – 27

என்றபடி எல்லா வுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி அளவிறந்த இரக்கத்தோடு நடக்க நாம் இடைவிட விடாது முயன்று வருவதோடு அம்முயற்சியில் வழுவாதிருக்குமாறும் நாம் இறைவனை வழுத்தி வருதல் வேண்டும். நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்திவெட்டுப் பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் எவ்வளவு வாய்விட்டுக் கதறுகின் றோம்! நம்மை ஒரு கொடியவர் கோலால் அடிக்க வரும் போதும், வாளால் வெட்ட வரும்போதும் நாம் எவ்வளவு பதை பதைத்துப் பெருந்திகிலோடு அவருக்குத் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோம்! இங்ஙனம் ஆடு, மாடு, கோழி, காக்கு, பன்றி, மீன் முதலான உயிர்களெல்லாம் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன!

கொண்டு

காண்

அந்தோ! அவற்றிற் பல எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடிய மாக்கள் கத்தி அறுக்கையில் அவைகள் எவ்வளவு துடிதுடிக்கின்றன! எவ்வளவு ஓலமிட்டுக் கூவுகின்றன! ஆ! அவற்றின் துன்பத்தை நினைக்கையில் எம் நெஞ்சம் நீராய் உருகுகின்றதே! அந்தோ! தீவினை! வாயற்ற அவ்வேழை உயிர்களை மடிக்கும் தீவினை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் விடாது. தாய்மார்களே, உங்களில் எத்தனைபேர் இவ்வேழை உயிர்களைக் கொன்று உங்கள் ஆடவர்களுக்கு அவற்றை உணவாகச் சமைத்து வைக்கின்றீர்கள்! நீங்கள் இக்கொடிய செய்கையைச் செய்யாதுவிட்டால் நீங்கள் அந்நல்வினையால் நம் ஐயன் அருளைப் பெறுவதோடு, நுங்களைச் சேர்ந்த ஆடவர் களுக்கும் நீங்கள் பெரியதொரு நல்வினையையும் பெரு நலத்தையும் தேடிக் கொடுப்பீர்கள்! பெண் மக்களாகிய நும்மாலே தாம் உலகம் சீர்திருந்த வேண்டும். ஆவதும் அழிவதும் எல்லாம் பெண்களாலேதாம். நுங்களில் எத்தனை பேர் அறியாமையிற் கிடந்து, ஊன் தின்னாத நுங்கள் ஆடவர் களையும் நோய் வருமென்று சொல்லி அ அச்சுறுத்தி ஊன் தின்னச் செய்துவிடுகின்றீர்கள்! ஐயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/125&oldid=1591095" இலிருந்து மீள்விக்கப்பட்டது