உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

99

மற்றொருவரைப் பற்றிலேன்

மறவாதொழி மடநெஞ்சமே

புற்றரவுடைப் பெற்றமேறி

புறம்பயந் தொழப் போதுமே

என்னுந் திருப்பாட்டே சான்றாகும்.

இன்னுங் கொல்லாதவர்களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைப் புலால் தின்னச் சொல்லியுங் கட்டாயப் படுத்தினவர்கள் எவர்களோ அவர்களும், மற்றவர்கள் சொல்லுக்காக அஞ்சி ஏழை உயிர்களைக் கொல் பவர்களும், அவற்றின் ஊனைத் தின்பவர்களும் அங்ஙனமே ஆண்டவனால் ஒறுக்கப்படுவாரென்பது,

கொன்றி லாரைக் கொலச் சொல்லிக் கூறினார் தின்றி லாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார் பன்றி யாய்ப்படி யிற்பிறந் தேழ்நர

கொன்று வார்அரன் ஆணையி துண்மையே

என்றும்,

கொலையஞ் சாதொரு வற்கஞ்சிக் கொன்றுளோர் சிலர்சொல் லஞ்சிப் புலாலினைத் தின்றுளோர் நிலைய தாய்நர கத்திடை நிற்பரென் றலகில் நூன்மறை ஆகமம் ஓதுமே

ம்

என்றும் காசிகண்டம் கூறுதலின் ஓர் உயிரைக் கொல்லும் படி ஒருவரை ஏவுவதும் அதன் ஊனைத் தின்னும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்தவதும் பெருந்தீவினையாய் முடியுமென்று அறிந்து கொள்ளுங்கள். தீங்கற்ற உயிர்களை ஒருவர் கொல்லப் போகையில் அதனை வேண்டாமென்று தடுத்தலும்,அவற்றின் ஊனைத் தின்பவர்களை அது செய்ய லாகாதென்று மறுத்தலும் மிகப் பெரிய நல்வினை யாகு மிகப்பெ மென்றும் உணர்ந்து கொள்ளுங்கள்.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/124&oldid=1591094" இலிருந்து மீள்விக்கப்பட்டது