உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

❖ ❖ மறைமலையம் - 27

நம்மைக் கொடுந் துன்பத்துக்கு உள்ளாக்கு வானென்பது திண்ணம்; இது குறித்தே அறிவுக் களஞ்சிய மான திருமூல நாயனார்,

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லிடி காரர் வரிகயிற் றாட்கட்டிச்

செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே

என்றும்,

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றிய தீவாய் நரகத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே

என்றும் திருவாய்மலர்ந் தருளினார். நம்மைப் போலவே நம் முழுமுதற்றந்தைக்கு இனியவாய் நம்மோடொத்த பிறப்பின வாகிய உயிர்களின் உடம்பைச் சிதைத்து அவற்றின் ஊனை உண்பதனால் வரும் தீவினைக்குரிய பயனை நாம் இந்த வுடம்பை விட்டுச் சென்றபின், நம்மை நிரயத்திலே தள்ளி வருத்துவதால் மட்டும் விளைவித்துப் பின் நம்மை விட்டு விடுவான் என்று நினையாதீர்கள்! நாம் இந்த வுடம்போடு கூடியிருக்கும் இந்தப் பிறவியிலேயே பெருவாரிக் காய்ச்சல் அம்மை கக்கற்கழிச்சல் நச்சுக் காய்ச்சல், சூலை, நீரிழிவு, தொழுநோய், வயிற்றுளைச்சல் முதலான எண்ணிறந்த நோய் களையும் வறுமை, கவலை, சண்டை, அரசர்போர், நில அதிர்ச்சி முதலான தீங்குகளையும், பேய் பிடியுண்டல், புலிகோட்படுதல், நச்சுயிர்களால் தீண்டப்படுதல் கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் ஏவி நம்மைப் பெரிதுந் துன்புறுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் சமயாசிரி யரான சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த,

குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையேவருந் திண்ணமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/123&oldid=1591093" இலிருந்து மீள்விக்கப்பட்டது