உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

97

யெல்லாம் பதப்படுத்தி வருகின்றான்! ஒருநாளில் நாம் எவ்வளவோ எறும்புகளை, எவ்வளவோ பூச்சிகளை, எவ்வளவோ புழுக்களை அறிந்தும் அறியாமலும் அழித்து விடுகின்றோம். ஆனால் அழித்த அச்சிற்றுயிரின் உடம்பை மறுபடியும் நம்மாற் படைக்க முடியுமா? ஓர் ஈயின் இறக்கை ஒடிந்தாலும் ஓர் எறும்பின் கால் முறிந்தாலும் அவற்றைத் திருத்திச் செப்பனிட நம்மாலாகுமா,? நம்முடைய உடம் பிலுள்ள உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் அதைத் தானும் நாம் ஒழுங்கு செய்து அமைத்துக் கொள்ளக் கூடுமா? இங்ஙனம் நம்மாலும் பிறராலும் சிறிதும் சய்யலாகாத உடம்பின் அமைப்புகளை யெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்துவரும் எம்பெரு மான் அருட்டிறங்களையெல்லாம் பேதையேன் என் நாவால் எங்ஙனம் புகழ்வேன், எவ்வாறு விரித்துரைப்பேன்!

ஒரு

அருமை மிக்க நேயர்களே! இத்தனை யிரக்கமுமுள்ள எம்பெ ருமான் அருளைப் பெற வேண்டும் நாம் அவனைப் போல் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் பூண்டு ஒழுங்கினா லன்றி, அவன் நம்மை அணுகமாட்டான். மக்களாயினும் மற்றைச் சிற்றுயிர்களாயினும் எல்லாம் நம் இறைவனுக்கு அருமைப் பிள்ளைகளே யாதலால், ஒரு தாய் வயிற்றிற் பிறந்த மக்களைப் போல் நாம் எவ்வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஒழுகுதல் வேண்டும். ஒரு தந்தைக்குப் பிறந்தமக்களுள் ஒருவன் வலியவனாயிருந்தால் அவன் தன்னினும் வலி குறைந்த சிறு பிள்ளைகளை அடித்து வருத்தலாமா? அங்ஙனஞ் செய்தால் அவன் தந்தை அவன்மேற் சினந்து அவனை ஒறுப்பான் அல்லனோ? இங்ஙனமே, எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந்தந்தைக்கு அருமைப் புதல் வர்களாம் உரிமை வாய்ந்த எல்லா உயிர்களும் தம்முள் நேசமும் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றி யமையாத கடமையாம்; இந்தப் பெருங்கடமையை நினையாமல், மக்களாகிய நாம் அறிவினும் உடம்பினும் வலியுடையவர்களாய் இருத்தல் பற்றி, நம்மினும் அறிவும் வலியுங் குறைந்த மெலிய உயிர்களைக் கொலைபுரிந்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் நம்மேற் பெரிதுஞ் சினந்து கொண்டு

கட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/122&oldid=1591092" இலிருந்து மீள்விக்கப்பட்டது