உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 27

அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்

அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே

என்னுந் திருமந்திரத் திருப்பாட்டும்இதற்குச் சான்றாம் அன்றோ?

இனி

றைவன் இரக்கவும் அன்பும் அருளும்

உடை யான் என்பதை எதனால் அறிகின்றோம் என்றால், அவன் மிகப் புல்லியவாய சிற்றுயிர்களுக்கும் வியப்பான உடம்புகளைப் படைத்துக் கொடுத்து, அவற்றின் வழியாக அவைகளின் அறியாமையைப் போக்கி,அறிவை விளக்கி, ன்பத்தை ஊட்டி, அவைகளை எண்ணிறந்த பிறவி கடோறும் பாதுகாத்து வரும் பேருதவிச் செய்கையினால் நன்கு அறிகின்றோம். பாருங்கள்! நாம் அறியாமையிற் கட்டுண்டு நமக்கு வேண்டுவது இன்னதுதான் என்று தெரிந்து கேளாமலிருந்த காலத்தும், அவன் நமக்கு வேண்டுவன வற்றையெல்லாம் விரும்பிக் கொடுத்தனன் அல்லனோ? நாம் நம் தாயின் கருப்பையிலே கருவாய்த் தங்கியிருந்த காலத்து நமக்கு வேண்டுவது இதுதான் என்று தெரிந்துகேட்கும் அறிவுடையே மாய் இருந்தனமா? சிறிதும் இல்லையே.

அப்பொழுதும் அவன் நமக்கு ஓர் ஒப்பற்ற துணை வனாய் இருந்து மலப்பை சிறுநீர்ப்பைகளால் நெருக்குண்டு இறவாமலும் அகட்டுத் தீயினால் வேகாமலும் நம்மைப் பாதுகாத்து, உணவிற் பிரித்த மிக மெல்லிய பாலை ஊட்டிப் பத்துத் திங்கள் காறும் சிறிது சிறிதாக நம்மை வளரச் செய்து, பின் நிரம்பவும் வியக்கத் தக்கதாக நம்மை வ்வுலகிற் பிறப்பித்து, அதன் பின்னும் ஓரிமைப் பொழுதும் இடை விடாது

ாது பலவகையானும் நம்மைப் பாதுகாத்துவரும் நம்அப்பன் பேருதவிச் செய்கைக்கும் பேரிரக்கத்திற்கும் ஓர் எல்லையுண்டோ! நாம் கேளாதிருக்கவும் நமக்கு இத்தனை யுதவியுஞ் செய்துவரும் நம் ஐயனுக்கு நாம் ஏது கைம்மாறு செய்தோம்! அன்றி ஏவு கைமாறுதான் செய்யமாட்டுவோம்? நமக்கு மட்டுமா நம்மினும் எத்தனையோ கோடி மடங்கு தாழ்ந்த அளவிறந்த சிற்றுயிர்களுக்கும் அவன் எத்தனை வகையான உடம்புகளை அமைத்துக் கொடுத்து அவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/121&oldid=1591091" இலிருந்து மீள்விக்கப்பட்டது